பாகம் 27: செயலிழந்தாள் சகுந்தலா

Story Info
கொலைச் சதிகாரியுடன் விவாதம்
1.3k words
5
6
00

Part 113 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 27: சதிகாரி சகுந்தலா செயலிழப்பு

மறு நாள் முதற்கட்டமாகச் சாந்தினியுடன் ஷீலா தன் அம்மா சகுந்தலா வீட்டை அடைந்து சாந்தினி கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட விவரத்தை எடுத்துரைத்து அவர்களுக்குள் பல வித தீர்வுகளை விவாதித்துக் கருக்கலைப்பு சரியான தீர்வில்லையெனவும் உடனடியாகத் திருமணம் என்பதே சரியான தீர்வு என முடிவெடுத்து ஜமீன் மாமாவின் வருகையை எதிர் நோக்கி இருந்தனர்.

சற்று நேரத்தில் மாமாவும் வந்து இணைந்து கொண்டார். விவரம் அறிந்ததும் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி மணமக்கள் இருவரையும் வெகுண்ட கோபத்துடன் அடிக்க மற்றவர்கள் தடுத்துச் சமாதானப்படுத்தி அடுத்து ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்க அறிவுறுத்தினர்.

சற்று நேரத்தில் என்னுடன் சியாமளா மற்றும் பானு என மூவருமாக அந்த வீட்டை அடைந்ததும் எங்களைக் கண்டதும் வரவேற்ற தனு மாமா, "வாங்க மாப்ள." என வழக்கமான அன்பான தோரணையில் வரவேற்க அதனால் சற்றே வெகுண்ட சகுந்தலா, "தனு இதென்ன கெட்டப்பழக்கம்? இப்படி ரோட்ல போரவரவங்கலை எல்லாம் மாப்ளேன்னு சொல்லுவியா? வீட்டில் வயசு பொன்னுங்களை வைத்திருக்கிற தகப்பனா பொறுப்பா நடந்துக்க மாட்டியா?"

நான், "வணக்கம் பெரியம்மா (சகுந்தலாவை வணங்கி) சரியாச் சொன்னீங்க (மாமாவை நோக்கி) இவுங்க அப்படியே எங்க அம்மா குணம்; எங்க சித்தப்பா சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன். எங்க அம்மா ரொம்ப நேரடியானவர்கள்.

அவுங்களுக்கெதிரே என்னை இப்படி மாப்ளேன்னு கூப்பிட்டு அதுவும் வயசுப் பொன்னுங்களை வீட்டில் வெச்சிருக்கீங்கன்னு தெரிந்தால்... அவ்ளோதான் 'லபலபலபன்னு' கொஞ்சம் கூட இங்கிதம் பார்க்காமல் ஏடாகூடமா பேசிடுவாங்க; அதனால முடிந்தவரைக்கும் அப்படி ஒரு நிலைமை வராமல் பாரத்துக்கோங்க." சொல்லி சற்று விலகி நின்றேன்.

சகுந்தலாவும் உடனடியாகத் திருமணம் செய்வதை ஆதரிப்பதாகவும் ஆனால் எல்லாம் சியாமளா முடிவெடுக்க வேண்டிய விஷயமெனப் புதுவிதமாகப் பிரச்சினையைத் திசை திருப்பினார். அதைக்கேட்டு அனைவரும் குழம்பி விழிக்க அவரே விளக்கினார்.

அதாவது சியாமளா மூத்தவள் அவளுக்கு முன் இளையவளை மணமுடித்தாள் அதன் பிறகு சியாமளாவை யாரும் மணமுடிக்க முன்வராமல் அவள் திருமணம் தடைப்பட்டுப் போகுமெனவும் அதனால் இந்தச் சூழ்நிலைக்கு ஒரே நல்ல தீர்வு அவர்கள் இருவருக்கும் ஒரே மேடையில் தன் மகனுக்கு மணமுடிப்பது; அதாவது சியாமளா, மற்றும் சாந்தினி இருவருமாகத் தன் மகனை மணக்க ஏற்பாடு செய்வதே சரியான தீர்வெனக் கூறினார்.

உடனே சியாமளாவோ தனக்குக் கல்யாணம் ஆகாமல் போனால் பரவாயில்லை ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவள் தன் முறை மாமனை மணம் செய்ய மாட்டேனென மறுத்தாள்.

பலரும் வற்புறுத்த மனம் கொதித்தவளாய் வெகுண்டவள், "அப்பா சித்தி சாந்தினி உங்கள் எல்லாருக்கும் ஒண்ணு சொல்கிறேன்; எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை; அவுங்களுக்கு (தன் முறை மாமனையும் பாட்டி சகுந்தலாவையும் சுட்டி) என்னைக் கல்யாணம் செய்துக்க முக்கியக் காரணம் என் சொத்துதான்.

அதனால் (தனு மாமாவை நோக்கி) தயவுசெய்து என் சொத்துக்களை இப்பவே நான் எழுதிக்கொடுத்துடுறேன்; தயவு செய்து என்னை விட்டுடுங்க; இதற்கு மேலேயும் என்னை வற்புறுத்தினீர்கள் நான் கடிதம் எழுதி வெச்சிட்டு தற்கொலை செய்துக்குவேன்."

இதைக்கேட்டு அனைவரும் அதிர அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் சகுந்தலா தனுவை நோக்கி, "என்ன பொன்னு வளர்த்து வெச்சிருக்கே; கொஞ்சமும் அடக்கம் ஒடுக்கமில்லாமல் இப்படிப் பஜேரி மாதிரி ஆடுறா; அதையெல்லாம் கேட்டுகிட்டு நீயும் சும்மா நின்னுக்கிட்டுருக்கே! எட்டு இடுப்புமேலேயே உதை உதைன்னு உதைத்தால் தன்னால வழிக்கு வருவாள்; நீ என்னடான்னா சும்மா கையைக் கட்டிக்கிட்டு நிக்குற?"

இக்கட்டான சூழ்நிலையில் தனு மாமா குழம்பிய முகத்தோடு என்னை நோக்க நான் உடனே சகுந்தலாவைச் சுட்டி ஜாடை செய்து நான் உரையாடலில் கலந்துகொள்வதை அவர் கண்டிப்பாரெனப் புரியவைத்தேன்.

உடனே மாமா, "அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் நீ இப்படி வாப்பா; (சகுந்தலாவை நோக்கி) அக்கா இந்தத் தம்பி எனக்கு ரொம்ப முக்கியமான ஆளு அதனால இந்தத் தம்பியை இந்த விஷயத்தில் பேசுவதைத் தடுக்காதே; நீ வாப்பா; இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லு."

அவர்களை அணுகிய நான் மீண்டும் சகுந்தலாவை மரியாதையுடன் வணங்கி, "அம்மா நீங்க பெரியவர்கள் நான் வயசில ரொம்பச் சின்னவன் அதுக்கும் மேல நான் ஒரு அன்னியன் உங்கள் குடும்ப விவகாரத்தில் தலையிட உரிமை இல்லாதவன்.

ஆனால் உங்க அன்புத்தம்பி வற்புறுத்துறதினால நான் எனக்குத் தெரிந்த வழியைச் சொல்லுகிறேன். தவறாக இருந்தால் என்னைக் கோபிக்காதீர்கள்; அதே சமயம் நான் ஏதாவது எல்லை மீறினால் உடனே கண்டிக்கத்தயங்க மாட்டீங்கன்னு நம்புகிறேன்."

இப்படி ஆழ்ந்த மரியாதை பண்பு அடித்தளமாக அணுக விருப்பமில்லாதவரும் வேறு வழியின்றி மௌனமாக ஏற்றுக்கொள்ள நான் தொடர்ந்து, "மாமா கொஞ்சம் பொறுமையா சியாமளாவை கேட்டுப்பார்க்கலாம்னு நினைக்கிறேன்."

தனு, "அட என்ன மாப்ளே இதற்கு போயி இவ்ளோ பவ்யமா; சட்டுபுட்டுன்னு தயங்காம கேளுங்கள்."

நான், "மாமா சில விஷயங்கள் நான் சொல்கிறதைக் கொஞ்சம் கவனமா நீங்களும் எல்லாரும் கேளுங்கள்; இது சிலருடைய வாழ்க்கைப் பிரச்சினை; அதனால எல்லாரும் மனம் விட்டு மிகப் பொறுமையாகச் சிந்தித்துச் சரியான எல்லாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை பற்றிப் பேசுவோம்.

அடுத்து (மாமாவை நோக்கி) இந்த வீட்டில் நான் உங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளியாக நடத்துங்க குறிப்பா என்னைச் செல்லமாக 'மாப்பிள்ளைன்னு' கூப்பிடுகிறதை இந்த உரையாடல் தொடரும் வரை தவிர்ப்பது நல்லது என்னை என் பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்.

ஏன்னா நீங்க என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிட்டால் உங்கள் அக்காவுக்கு விருப்பமில்லை அதனால அவுங்க மனம் திசை திறும்புது அதனால ப்லீஸ்! (சியாமளாவை நோக்கி) சியாமளா உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் இந்த விஷயத்தில பேசலாமா?"

என் முன் ஏற்பாட்டின் படி சற்றே யோசித்துப் பின்னர், "எனக்கென்னவோ வேண்டாமென்று தோனுது ஆனால் எங்க அப்பா பேச்சைத் தட்டக்கூடாது அதனால பரவாயில்லை நீங்க பேசுங்கள்; ஆனால் ஏடாகூடமா எதுவும் கேட்காதீர்கள் ப்லீஸ்!"

நான், "நீங்க உங்கள் மாமாவைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லைன்னு சொன்னீர்கள் அதற்குக் காரணம் அவுங்க அதாவது உங்கள் மாமா மற்றும் அவர் அம்மாவின் முக்கிய எதிர்பார்ப்புச் சொத்துதான் உங்கள் மேல் அக்கறை இல்லையென்று சொன்னீர்கள். (ஆமென் தலையசைத்தாள்).

அது உங்களுடைய தவறான கணிப்பாக இருக்கலாமென்று மத்தவங்க எல்லாரும்; குறிப்பாக அதைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் நினைப்பார்கள். அதனால அதைப் பற்றிய முழு விவரத்தை அதாவது எப்போது உங்களுக்கு முதல் அறிகுறித் தெரிந்தது அதன்பின் அடுத்தது என உங்களால் முடிந்த வரைக்கும் சரியாக நினைவு படுத்திச் சொல்ல முடிந்தால் அதைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ளவும் அதே சமயம் அது தவறான கருத்தென்று நினைப்பவர்களுக்கும் எதிர் வாதம் செய்ய ஏதுவாக இருக்கும்.

அதாவது முதலில் நீங்க உங்கள் மாமாவை விரும்பித்தான் கல்யாணம் செய்துக்கச் சம்மதித்தீர்கள் ஆனால் மெல்ல உங்கள் மனம் மாறி வேண்டாமென்று முடிவு செய்தீர்கள்.

அதற்கு முக்கியக் காரணம் படிப்படியாக நடந்த விஷயங்களை நினைவு கூர்ந்து சொல்ல முடிந்தால் அது மத்துவங்களுக்குப் புரிய உதவும்."

சியாமளா, "எனக்குக் கல்யாணத்துக்கு முன் தொட்டுப்பழக விருப்பமில்லை ஆனால் என் மாமாவுக்கு அதில் எனக்கு எதிர்மறையான கருத்து. முதலில் பெரும்பாலும் எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான் எல்லாரும் சொல்ல நானும் பெரிதாக எடுத்துக்கல.

ஆனால் அதற்காக அவரை வெறுக்க ஆரம்பிக்கல; ஆனால் தொடர்ந்து அவர் முயற்சி செய்ய ஒரு கட்டத்தில் அது அவுங்க அம்மா அதுதான் எங்க பாட்டியும் சேர்ந்து செய்வது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

அதுக்கப்புறம் ஒரு கட்டத்தில் அதைச் செய்யச் சொல்லித் தூண்டுவது எங்க பாட்டியென்று தெரிந்ததும் எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதன் அடுத்த கட்டமாக என் பாட்டி என் மாமாவுக்குச் சொன்ன திட்டம் என் மனதைக் கோபமும் குழப்பமும் கொள்ளவைத்தது.

அது என்னன்னா அவுங்க சொன்ன சொல் நான் எதிர்பாராத விதமாக மறைந்திருந்து கேட்க நேர்ந்தது 'அவள் சரிப்பட்டு வரமாட்டாள் நீ சின்னவளை தயார் செய்கிற வேலையப்பாருன்னு' சொன்னார்கள்.

என் மாமாவும் 'அவள்தான் சுலபமா நம்ம வழிக்கு வருவாளென்று' சொல்ல எனக்குத் தூக்கி வாரிப் போட்டது; அப்போதான் எனக்குக் கொஞ்சம் தெளிவாக ஆரம்பித்தது. அதாவது தாயும் மகனும் ஏதோ திட்டம் போடுறாங்கன்னு தெரிந்தது.

நான் என் மாமாவிடம் கனிவாகப் பேசி ஏன் என்னைப் பிடிக்கலையான்னு எதற்கு என் தங்கச்சி மேல் ஆசை வலையை விரிக்குறீங்கன்னு கேட்க அவர் பல காரணங்களைச் சொல்ல ஆரம்பித்தார்; முக்கியமா அவள் என்னைவிட அழகென்றும் அவள் அவர் விருப்பத்துக்கு எதிர்த்து நடந்துகொள்ள மாட்டாள்-னும் சொன்னார்.

உடனே நானும் அவர் கல்யாணத்துக்கு முன் தொட அணுமதிக்காததினால இப்படி என்னைப் பிடிக்கலையான்னு கேட்க அதுவும் ஒரு காரணம் அதைவிட அவருக்கு இரண்டு பேரும் வேண்டுமென்று சொன்னார் அதாவது இரண்டு பேரையும் கல்யாணம் செய்துக்கத் திட்டம்/ஆசையென்று சொன்னார்.

இதில் ஏதோ சூது இருப்பதாக எனக்குத்தோன மெல்ல அவுங்க நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பிக்க மெல்லமெல்ல எனக்கு அவுங்க திட்டம் தெளிவானது.

அவுங்க முதல் திட்டம் என்னைக் கல்யாணம் செய்து பின்னர் உடனே சாந்தினியைக் கர்ப்பமாக்கி வேறு வழியில்லாமல் அவளையும் கல்யாணம் செய்துக்கறது.

அது பலிக்காமல் போக அவளைக் கல்யாணம் செய்வதாக ஏற்பாடு செய்து அதே சமயம் என்னை ஏதாவது சந்தர்ப்பத்தில் என்னைக் கர்ப்பமாக்குவது அப்படிச்செய்து எங்கள் இரண்டு பேரையும் கல்யாணம் செய்வது.

நான் மெல்ல அவுங்க திட்டத்தை அதாவது அம்மாவும் புள்ளையுமா இரண்டு பொன்னுங்களையும் கல்யாணம் செய்ய விரும்புவதைச் சாந்தினி கிட்டச் சொல்ல அவளுக்கும் அது அதிர்ச்சியாக இருக்க அவள் எங்க மாமாகிட்ட கேட்க அதுக்கு அவர் என் மேல் பரிதாபம் கொண்டதாகவும் அவரை விட்டால் என்னை யாரும் கட்டிக்கொள்ளாமல் நான் கன்னிப் பொன்னாகவே வாழ்க்கை பாழாகிடும்னு சொல்லி அதனால் அவர் கவலைப்படுவதாக அக்கறை வேஷம் போட்டார்; நாங்க இரண்டு பேரும் அதைத் தொடக்கத்தில் நம்பினோம்.

ஒரு கட்டத்தில் சாந்தினி என்னை இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கச் சம்மதம் கேட்டாள். எனக்கு அவுங்க உண்மையான எண்ணம் வேற ஏதோன்னு உள்மனம் சொன்னதால் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி அவுங்க நடவடிக்கையைத் தீவிரமா கண்காணித்ததில் என் பாட்டி என் மாமாவை அவசரப்படுத்தியது தெரிந்தது.

அதாவது இன்னொரு சந்தர்ப்பத்தில் மறுபடியும் அவுங்க இரண்டு பேரும் பேசிக்கொண்டதை நான் மறைவிலிருந்து கேட்க நேர்ந்தது அது என்னன்னா சரியான சந்தர்ப்பம் பார்த்து என்னை ஏதோ போதை/மயக்க மருந்து கொடுத்துக் கொடுத்து கர்ப்பமாக்கி என்னையும் கல்யாணம் செய்துக்கத் திட்டம் போட்டது.

இதைக் கேட்டதும் நான் ரொம்பப் பயந்து உடனே அவுங்களுக்குத் தெரியாமல் நான் மட்டும் என் வீட்டுக்கு வந்துட்டேன். அதுதான் நான் கடைசியாக இந்த வீட்டுக்கு வந்தது. அதுக்கபுறம் நான் முடிந்தவரைத் தவிர்த்து ஏதாவது விஷேஷம்னா மட்டும் போவேன்.

ஆனால் முடிந்த மட்டும் என் சித்தி கூடவே இருப்பேன் என் மாமா பாட்டி இரண்டு பேரையும் நெருங்க மாட்டேன்; அவுங்க எதைச் சாப்பிடக் கொடுத்தாலும் சாப்பிடப் பயம்."

சாந்தினி, "அமாம் அவள் சொல்கிறதெல்லாம் உண்மை அதுக்கும் மேல சமீபகாலமா என்னை முதல்ல கெஞ்ச ஆரம்பித்து இப்போது மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க; அதாவது நான் அவுங்களுக்கு உதவி செய்யனும்னு என்னை நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க."

நான், "உதவியென்றால் எந்த மாதிரி கொஞ்சம் தெளிவா."

சாந்தினி, "அதுதான் சியாமளாவைச் சம்மதிக்க வைப்பது அது முடியாமல் போக அவளை மயக்கமாக்கி என் மாமா கூடப் படுக்க." வாயடைத்துச் சொல்ல முடியாமல் அழ ஆரம்பித்தாள்.

உடனே ஷீலா அவளை ஆதரவாக அணைத்துச் சமாதானப்படுத்தியவாறே தன் அம்மா மற்றும் தம்பியை நோக்கி நீங்கெல்லாம் மனுஷ ஜென்மங்களா? இல்லை?"

நான் குறுக்கிட்டு, "கொஞ்சம் பொறுங்கள் அத்தை ஒரு பக்க கதையை மட்டும் கேட்டு முடிவெடுக்காதீர்கள் அவுங்க என்ன சொல்ல,"

அதற்குள் பொறுக்காமல் ஷீலா அத்தை, "அப்போ என் பொன்னுங்க பொய் சொல்லுதுங்களா?"

நான், "அப்படி இல்லை அத்தை; கொஞ்சம் பொறுமையா சிந்திக்கனும்னு சொல்ல வரேன்; அதாவது முதல்ல இவுங்க சொன்னதை அவுங்க ஒத்துக்கறாங்களா/மறுக்கங்களா? ஒத்துக்கிட்டா அவுங்க தரப்பிலிருந்து என்ன காரணத்துக்காக அவுங்க இப்படிச் செய்யுராங்க?

இதையெல்லாம் முழுமையாகத் தெரிந்து முடிவு செய்வது நல்லது. கோபப்பட்டு முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. (சாந்தினியின் கர்ப்ப நிலையைச் சுட்டி) கொஞ்சம் மனசில் வெச்சிக்கிட்டுப் பொறுமையா கையாளுவது நல்லதென்று எனக்குத் தோனுது." எனச் சகுந்தலா நம்பும்படியாகக் கூறினேன்.

ஷீலா, "இவ்ளோ நடந்த பிறகு இன்னும் பொறுமையா இருக்கச் சொல்லுறியா? (சாந்தினியை நோக்கி மிகக் கோபமாக முறைத்தவாறே) இவ்ளோ நடந்த பிறகும் நீ அவனைக் கல்யாணம் செய்துக்கப் போறியா?"

நான், "மாமா அத்தையைக் கொஞ்சம் சமாதானப்படுத்துங்கள் ப்லீஸ்!"

தனு, "மாப்.. (நான் ஜாடை செய்ய) ரகு நான் எப்படிப் பொறுமையா இருக்கேன்னு எனக்கே தெரியலை; இதுல நீ என்னைப் போயி ஷீலாவை சமாதானப்படுத்த சொல்லுற. வேடிக்கையா இருக்கு; உண்மையச் சொல்லனும்னா நான் இவ்ளோ பொறுமையா இருப்பதே உனக்காகத்தான். உன்னைப்பார்த்து தான்; அதெப்படி ரகு நீ 'இதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு' சர்வசாதாரணமா இருக்கிற; எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது... அப்படியே!"

நான் குறுக்கிட்டு, "இதுவரை கேட்ட விவரங்கள் கொஞ்சம் மனதைக் கலக்கும் கோபத்தைக் கிளப்பும் விஷயமாகத்தான் இருந்தது. ஆனால் உண்மை தெரியாமல் கோபப்படுவது நிச்சயம் நல்ல பலன் அளிக்காதென்று நான் சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

முதல்ல அவுங்க உங்கள் அக்கா, வயசில மூத்தவர்கள் அவுங்க இப்படிச் செய்யச் சம்மதித்திருந்தால் அதுக்கு வேறு ஏதோ பெரிய காரணம் இருக்கும்னு எனக்குத் தோனுது; அது என்னன்னு கேட்டுட்டு முடிவெடுப்பது நல்லதுன்னு நான் நினைக்கிறேன்."

சகுந்தலா, "அட சின்னப்பையனா இருந்தாலும் பொறுமையாக யோசிக்கிற புத்தி இருக்கு; பரவாயில்லை நீ பொழச்சிக்குவ; (மாமாவை நோக்கி) சரிசரி சும்மா வளவளன்னு எதற்குப் பேச்சு; இதோபார் தனஞ்செயா! நான் சொல்வதை நல்லா கவனமா கேளு.

கிட்டத்தட்ட 30 வருஷமா நான் உனக்கு எது நல்லது எது கெட்டுதுன்னு அக்கறையாகக் கவனித்து எடுத்துச் சொல்லி பத்திரமா பார்த்துக்கிட்டு வரேன்; ஆனால் நீயும் எத்தனையோ விஷயங்களில் என் பேச்சைக்கேட்காம உன் இஷ்டத்துக்கு முடிவு செய்து உயிர்ப் பலியானதுதான் மிச்சம்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous