பாகம் 18: பெரும் குடி மக்களே!!

Story Info
குடும்ப நண்பர்களுடன் கொண்டாட்ட களிப்பு
1.1k words
0
8
00

Part 104 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 18: குடி மக்களே பெரும் குடி மக்களே

ஜெயா அத்தையுடன் உரையாடியதில் சற்றே மனம் ஆறுதல் அடைந்தாலும் முழுமனதாகத் தெளிவடையவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்டது முற்றிலும் சரியே அதாவது முதலில் உண்மையைக் கண்டுபிடிக்கவேண்டும் ஆனால் என் மனம் இப்படி இருந்தால் என்ன செய்வது அப்படி இருந்தால் என்ன செய்வதென முன் கூட்டியே அனுமானித்து அதன் பின் விளைவுகளை நினைத்துக் கலங்குகிறேன். அதாவது நான் செய்வது சரியே ஆனால் கலங்காமல் அதை எதிர்கொண்டு திறம்படக் கையாண்டு முடிக்க வேண்டும் எனத் தெளிவடைந்தேன்.

நாங்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கக் கயல்விழியும் வந்து சேர்ந்தார். அனைவருடனும் அறிமுகப் படலம் தொடங்க கமலாவைக் கண்டதும் சற்றே இன்ப அதிர்ச்சியாய் அவளை நலம் விசாரித்த படி என்னைக் கேள்வியாய் நோக்க நான் கமலாவைப் பற்றி முழு விவரத்தையும் அவள் முன்னேற்றத்திற்கான என் திட்டத்தையும் விளக்கினேன்.

முழு விவரத்தையும் கேட்டு முடித்தவர் முடிவில் சற்றே கொஞ்சலான கோபத்துடன், "என்ன தம்பி எல்லாப் புண்ணியத்தையும் நீயே எடுத்துக்கிட்டா எப்படி எங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுப்பா!"

அவர் பேச்சின் அர்த்தம் புரிந்த நானும் ஜெயா அத்தையும் புன்னகைத்துப் பதிலளிக்க ஆயத்தமாக அதே சமயம் சற்றே குழம்பிய கண்களுடன் கமலா என்னை நோக்க நான் கமலாவின் தற்போதைய மனநிலையைத் தெளிவாக எடுத்துரைத்து. அவள் முழுமையாகச் சாதாரண நிலைக்கு வந்த பிறகு அதைப் பற்றிப் பேசலாம் எனவும் அதுவரை அவளை நாம் எந்தத்தொந்தரவும் செய்யாமல் இருப்பதே நாம் அவளுக்குச் செய்யும் முக்கிய உதவி என விளக்கினேன். நான் குறிப்பிட்டதை முழுவதும் புரிந்துகொண்டார் கயல்.

அனைவருடனும் நீண்ட நேரம் செலவிட்டுப் பேசி மகிழ்ந்தார் அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் மிக்க மகிழ்ச்சியோ!டு பேசி கொண்டாட்டத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.

கயல்விழியும் அனிதாவும் நீண்ட நேரம் உரையாடி இருவருக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்து இருவரும் மிக நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். இப்படிப் பலருடனும் பழகி அனைவரையும் மிகவும் நேசித்தார்.

மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருந்த கயல்விழி, "அப்பப்பா உண்மையில் என் வாழ்நாளில் இந்த அளவுக்குக் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்ததே இல்லை," என வியந்து புகழ்ந்தார்.

ஷீலா, "எல்லாம் இந்தத் தம்பி வந்ததிலிருந்து எங்களுக்குத் தினமும் இப்படித்தான்."

கயல்விழி, "அட அப்படியா! நானும் அப்படித்தான் உணர்ந்தேன் தம்பி வந்திருந்த இரண்டு நாள் என் வாழ் நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாட்கள். அதுலேயும் இத்தனை பொம்பலைங்களை இந்தத் தம்பி ஒரு ஆளாக இருந்து பொழுது போக்குவிக்குறது (Entertain) பாராட்டப்பட வேண்டியது.

அதே சமயம் இத்தனை பொன்னுங்களும் நல்ல குணவதிகளா தேவதைகளாக வலம் வருவது தான் ரொம்பச் சிறப்பு. எனக்கு இந்தச் சூழ்நிலை நிறையப் பிடித்து மனசுக்கு ரொம்பச் சந்தோஷத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்துது."

ஜெயா, "இதைக்கேட்க எனக்கு மனம் குளிருது; இனிமேல் நீ இங்கே அடிக்கடி வரனும்."

கயல்விழி, "அட நிச்சயமா நீங்கச் சொல்லவே வேண்டாம்."

ஜெயா, "சரிசரி இன்றைக்கு நீ இங்கேயே தங்கிட்டு நாளைக்குத்தான் போகனும் நல்லா தளர்ச்சியா நம்ம கொண்டாட்டத்தைத் தொடரனும் இது வேண்டுகோள் இல்லை கட்டாயம் சரியா!"

கயல்விழி, "உண்மையைச் சொல்லட்டுமா (குறும்பாகப் பார்த்தவர்) நானே உங்களை எப்படிக் கேட்கலாம்னு தயங்கிட்டிருந்தேன். எப்படியோ! என் மனதைப் புரிந்து நீங்களே இப்படி ஆசையா மிரட்டினால் நான் என்ன வேண்டாம்னா சொல்லுவேன்!" சொல்லிச் சிரித்தார்.

அனைவரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வந்தோம்; அனைவரும் முதல் சுற்றாகப் பலவித பழரசம் குடிக்க எனக்கு ஒரு கோப்பையில் சியாமளா பரிமாறினாள்.

உடனே மிக லாவகமாக எங்களை அணுகிய அனிதா சியாமளா கொடுத்த கோப்பையைத் தடுத்து, "ஏய் உனக்கு அது வேண்டாம் இந்தா இது உனக்குச் சிறப்பானது." சொல்லி கையில் திணித்தாள் ஒரு கோப்பையை. குழப்பமாய் நோக்கிய சியாமளாவை, "என்ன நீயும் குடிக்குறியா கொஞ்சம்?"

நான், "ஹஹா வாவ், அடி என் செல்லமே உனக்கு என் சிறப்பான நன்றி."

சியாமளா, "என்னது அது?"

அனிதா, "Moscato White Wine நல்லா கொஞ்சம் இனிப்பா இருக்கும் சுவைத்துப் பார்க்குறியா (என்னை நோக்கி) நீயே அவளுக்குப் புரியவை."

நான், "அது ஒரு பாணம் திராட்சைப் பழச்சாற்றிலிருந்து செய்யப்படும் ஒரு இலகு வகை ஒயின் கொஞ்சம் மது கலந்த பாணம்."

மது என்ற வார்த்தையைக் கேட்டதும் முகம் சுருங்கிய சியாமளா, "ஐயோ! எனக்கு வேண்டாம்; நீ... நீ குடிப்பியா?"

அதற்குள் ஏதோ ரகசியமெனப் பானு தலையிட அதைக் கவனிக்காத நான், "அது அவ்ளோ மோசமில்லை கொஞ்சம் குடிக்கிறது உடம்புக்கு நல்லதுன்னு சொல்லுறாங்க."

பானு, "நல்லா இருக்குமா எனக்குக் கொஞ்சம் குடேன்."

அனிதா, "Yes இந்தா கொஞ்சமா சுவைத்துப் பார்."

சுவைத்தவள் முகம் சற்றே இறுகி, சுருங்கி பின் மெல்ல, "ம்ம்ஹும் கொஞ்சம் ஒரு மாதிரியா முதல்ல கொஞ்சம் நல்லா இல்லை ஆனால் அப்புறம் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் குடிக்கனும் போல இருக்கு."

அனிதா, "அவ்ளோதான் இன்னும் கொஞ்சம் குடி; பிடிச்சா குடி இல்லேன்னா விட்டுடு."

அதற்குள் சாந்தினியும் இணைந்து கொள்ள அவளும் சிறிது சுவைத்துக் கிட்டத்தட்டப் பானுவைப் போன்றே இப்படியும் அப்படியுமாக இன்னும் சிறிது சுவைக்க விரும்பினாள்.

அதே சமயம் ஏதோ ரகசிய லீலை தொடர்வதைக் கவனித்த ஜெயா அத்தை வந்து சேர அவரைத் தொடர்ந்து ஷீலா, கயல் மற்றும் என் சித்தி என அனைவரும் ஒன்று கூடினர்.

விஷயம் அறிந்த ஜெயா அத்தை அனிதாவை நோக்கி சற்றே கோபித்த வன்னம், "Don't be childish Annie; it's not good for them; you are unnecessarily என்னை நோக்கி ரகு நீயே கொஞ்சம் அவளுக்குப் புரியவைப்பா."

அனிதா, "Don't worry mom me and Ragu can handle smoothly; please trust us and relax."

கயல்விழி, "என்னக்கா ஏன் இந்தத் தேவதையைத் திட்டுறீங்க?"

நான், "அது ஒரு பாணம் திராட்சைப் பழச்சாற்றிலிருந்து செய்யப்படும் ஒரு இலகு வகை ஒயின் கொஞ்சம் மது கலந்த பாணம்." மது என்ற வார்த்தையைக் கேட்டதும் அனைவரின் முகம் சற்றே வியந்து அதிர்ந்தன, "நீங்க நினைக்கிற அளவுக்கு அவ்ளோ மோசமானதில்லை கொஞ்சம் லேசா.

அடிப்படையில் அது ஒரு திராட்சைப் பழச்சாறுதான் அதை நீண்ட காலமாகப் புளிக்கவைத்து அதாவது தோசைக்கு மாவு அரைத்துப் புளிக்க விடுகிறமாதிரி நீண்ட நாட்களுக்கு, கிட்டத்தட்ட வருஷக்கணக்கா புளிக்க விடுவார்கள்.

அது அப்படிப் புளித்து ரசாயன மாற்றம் அடைய அது கொஞ்சம் மதுவும் வெளிப்படும் அவ்ளோதான். ஆனால் விஷயம் தெரியாதவர்கள் அதையும் தீவிரமான மதுன்னு நினைத்து தவறாகப் புரிந்து பிரச்சினையாக வாய்ப்பு உண்டு.

அதனால ஜெயா அத்தை அதைத் தவிர்க்கிறது நல்லதுன்னு சொல்றாங்க. இதைச் சரியா புரிந்து கொள்ளாத அனிதா அதை எல்லாருக்கும் குடிக்கக் கொடுக்கலாம்னு சொல்லுது; இதுதான் பிரச்சினை. (சொல்லும் போதே அனைவரின் முக பாவனைகளை கவனித்த நான் அனிதாவை நோக்கி) அனிதா நான் சொல்றதைக்கேளு; இது அவுங்களுக்குப் புதிது -- இதை ஜெயா அத்தைதான் பழகிவிட்டதா பேச்சு வரும் அது அத்தைக்குக் கெட்ட பெயர். அமெரிக்கா போயி அமெரிக்கக் கலாச்சாரத்தில் கெட்டுவிட்டதாகக் கெட்ட பெயர் வரும் அதனால இதைத் தவிர்ப்பது நல்லது."

ஷீலா, கயல்விழி மற்றும் என் சித்தி என் மூவரும் சேர்ந்து நான் சொல்வது சரியெனவும் நல்ல மகிழ்ச்சியாக இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏன் இப்படிக் குழப்பிக் கெடுத்துக்கனும்னு அதைத் தவிர்ப்பதே நல்லதென முடிவெடுத்தனர். உடனே சியாமளா ஒத்து ஊத பானுவும் சாந்தினியும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டனர்.

ஜெயா, "ரகு ரகுதான்! நிலைமையைப் புரிஞ்சிகிட்டு நடந்துக்கத் தெரிந்த பிள்ளை."

ஆனால் சிறிதளவும் சமாதாணமடையாத அனிதா, "அடப்பாவி நீ எனக்குச் சாதகமாகப் பேசி அவுங்களைச் சம்மதிக்க வைச்சிடுவேன்னு நம்பிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படிக் கௌவுத்துட்டியே; போடாப்போடா லூசு; உலகமகா லூசு; உன்னையெல்லாம் நம்பினால் அவ்ளோதான்." அவள் செல்லமாகத் திட்டுவதை அனைவரும் ரசித்துச் சிரிக்க ஜெயா அத்தை என்னைக் கட்டி முத்தமிட்டு வாழ்த்தினார்.

ஷீலா, "இப்படி அத்தைக்கு ஆதரவு செய்து பொன்னு பிடிக்காமல் போயிடுச்சே; உன்னைப் பார்த்தால் பாவமா இருக்கு தம்பி."

கயல்விழி, "ஆமாம் தம்பி நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன்."

நான், "ஜெயா அத்தை உதவி செய்யச் சொன்னார்கள் அவுங்களுக்கு உதவுவது என் கடமை இல்லையா?"

அனிதா, "அப்போ என் கதி என்ன? எனக்கு யாரு உதவி செய்றது? (செல்லமாக என் காதைப்பிடித்து) டேய் லூசுப்பையா; பொன்னு பேச்சைக் கேட்காமல் பொன்னோட அம்மா பேச்சையா கேட்பாங்க! லூசுலூசு."

நான், "நான் உன் பேச்சைக் கேட்க மாட்டேன்னு சொல்லலையே. முதல்ல உதவி கேட்டது அத்தை அதனால நான் அத்தைக்கு உதவி செய்தேன்; நீ கேட்டிருந்தால் உனக்கு உதவி செய்திருப்பேன்."

அனிதா, "ஆமாம் கிழிச்ச; சுத்தமா வழியே இல்லாமல் கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டயே அப்புறமென்ன பேச்சு."

ஷீலா, "அது வாஸ்தவம்தான் அத்தை சொல்கிறதுதான் சரின்னு சொல்லிட்டியே இப்போ என்ன செய்யமுடியும்."

நான் (அனிதாவை நோக்கி), "நீ ஒரு வார்த்தை சொல்லு கண்ணே நான் உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்."

அனிதா, "Oh Come on Don't be silly; No way you can make it."

நான், "நிச்சயமாக முடியும் நீ சவால் விடத்தயாரா?"

அனிதா, "Ok I owe you... anything... blank cheque as you wish."

ஜெயா, "ஐயையோ! போச்சி போச்சி; தம்பி மனதை மாத்திட்டாளே; வேண்டாம் தம்பி அவள் பேச்சைக் கேட்காதே!"

கயல்விழி, "அட இதென்ன சிரிப்பா இருக்கே!! ஜெயா அக்கா ஏன் இப்படிப் பயப்படுறீங்க. நீங்கப் பிடிவாதமா வேண்டாம்னு சொன்னால் தம்பி மறுத்துப் பேசாது. உங்களை ஏமாற்றிச் சம்மதிக்க வெச்சிடுவாரோன்னு பயப்படுறீங்களா?"

ஜெயா, "உனக்குத் தெரியாது கயல், தம்பி நல்ல புத்திசாலி நம்மை எல்லாம் மிகச் சுலபமா தோற்கடித்து நினைக்கிறதை நிச்சயமா செய்திடும்; நீயே பாரு நடக்கிற வேடிக்கையை."

குறுகுறுவென அனைவரும் ஆவலாய் என்னை நோக்க, "சரி ஆரம்பிக்கலாமா; முதல்ல: ஜெயா அத்தை -- நீங்க அதைக் குடிப்பீர்களா? உங்களுக்குப் பிடிக்குமா?" புன்னகைத்தவர் வேண்டுமென்றே 'குடிப்பதில்லை, பிடிக்காதென' மாற்றிச் சொல்ல,

உடனே மிக ஆவேசமாய் பொங்கி எழுந்த அனிதா, "பொய்! பொய்! பொய்! 'பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதென்று கத்துக் குடுத்துட்டு... அம்மா இப்படிப் பொய் சொன்னால்... போஜனம் மட்டுமில்லை இது (அந்த மதுவைச் சுட்டி) ஒரு துளிகூட கொடுக்கமாட்டேன். Oh My God இப்படி Bottle-bottle-லா குடிச்சிட்டு எப்படி வாய்க் கூசாமல் பொய் சொல்கிறார்கள் பாறேன்; அம்மா This is too much; Don't bluff Amma You must be fair in argument."

கயல்விழி, "அட ஏன் அக்கா பயப்படுறீங்க; உண்மையைச் சொல்ல ஏன் பயப்படனும்; நாம உண்மையைப் பேசியே தர்க்கம் செய்து வெற்றி பெறலாம் தைரியமா சொல்லுங்கள்."

ஷீலா, "அட அதுதானே நாம ஏன் பொய் சொல்லி ஏமாத்தனும்; நீங்க ஒரு டாக்டர் உங்களுக்குத் தெரியாதா! அதைவிடக் கூத்து என்னன்னா (ஜெயாவை நோக்கி) உங்கள் வீட்டுலையே உங்கள் பொன்னு உங்களுக்கு ஒரு சொட்டுகூட குடிக்கக் கொடுக்க மாட்டேன் மிரட்டுவது ரொம்பச் சிரிப்பா இருக்கு. அதென்ன சாமர்த்தியம்; நாம பார்த்திடலாம் ஒரு கை; நீங்கப் பயப்படாமல் தைரியமா உண்மையச் சொல்லு ஜெயா."

தொடரும்

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous