பாகம் 11: வாங்க பழகலாம்

Story Info
அன்றாட வாழ்க்கைச் சூழல் பிரச்சினைகளைத் திறம்படக் கையாளுதல்
1.3k words
0
11
00

Part 47 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே

பாகம் 11: வாங்க பழகலாம்

காலை வெயில் சற்றே அதிகமாயிருக்கப் பேருந்தில் செல்ல முடிவு செய்து பேருந்துக்குக் காத்திருக்க நான் மீண்டும் பானுவின் நினைவு வர, "பேருந்து வந்ததும் என்னைக் கூப்புடுங்க; அதுவரைக்கும் நான் பானு கிட்ட,"

அத்தையும் சியாமளாவும், "அடடடடா! அவளைச் சீண்டலன்னா உனக்குப் பொழுதே போகாதா?"

நான், "நம்பப் போன பிறகு பானு தனியாத்தானே இருக்கும், அதனால போறவரைக்கும் கொஞ்ச நேரம் சீண்டி விளையாடினால் பானுவுக்கு கொஞ்சம் பொழுது போகுமில்ல. அப்புறம் நான் பானுவுக்கு விரைவா ஏதாச்சும் உதவி செய்ய முடியுதான்னு முயற்சி."

இது ஏதும் புரியாமல் விழித்த அனிதாவை அழைத்துக் கொண்டு மருத்துவருக்கு அத்தையை விளக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று பானுவை அணுகும் வழியில் அனிதாவுக்கு விளக்க; அனிதா ஆச்சரியப்பட்டாள்.

நான் பானுவிடம் பேசி அவளுக்குப் பொழுது போக்க வானொலி, புத்தகம், சொல் புதிர் முதலியவற்றைத் தயார் செய்து கொடுக்க அவள் மட்டற்ற மகிழ்ச்சியில் என்னைப் பாராட்டி அழுகையோடு என்னைக் கட்டி அணைத்துக் கொள்ள முடியாமல் தவி தவித்து வழி அனுப்பினாள்.

அதன் உச்சமாக அன்று மாலை வீடு திரும்பியதும் அவளுடன் கல்லாங்காய் விளையாடுப் போட்டிப் போட்டுத் தோற்கடிக்கப்போவதாகவும் சவால் விட்டேன். பின்னர் ஐந்து நிமிட பயணத்திற்குப்பின் பேருந்தை விட்டு இறங்கியதும் அனைவரும் அனல் அடிக்கும் வெயிலின் சீற்றத்தால் அதிருப்தி கொண்டனர்.

அனிதாவோ, "Wow so greenish and so huge area!! Oh My God! Amma it's pretty amazing."

நான், "Yes it is; Well... did you say Amma?"

மருத்துவர், "Yes it is dear. (என்னை நோக்கி) அவளுக்குத் தமிழ் பழகனும்னு ஆசை வந்ததா சொன்னா; அதனால முதல்ல அம்மான்னு கூப்பிட்டுப் பழகுன்னு நான் சொல்லி அதப்பழகுறா."

ஷீலா, "என்ன சொல்றாங்க சின்ன டாக்டர்?"

நான் விளக்கத்தொடங்க அதே சமயம் அனிதாவும் ஏதோ முயற்சிக்க, நான் அவளைப் பேச விட்டேன்.

அனிதா, "இது... Plants ரும்ப... பச்சி பச்சியா பொரிய area-ல அற்பாதாமா அல்கா இருக்து."

ஷீலா, "ஐய்யோ ஒண்ணுமே." நான் அத்தைக்குச் சைகை காட்டப் புரிந்து சற்று நிறுத்தினார்.

நான், "(அனிதாவை நோக்கி) Let's correct a bit (சொல்லி அவளை நான் உச்சரிக்க அவளைச் சொல்லச் செய்தேன்) 'இந்தப் பச்சைப்பசேலெனப் பயிர் (So greenish cultivation) விஸ்தாரமான நிலத்தில் (So huge coverage) அற்புதமான காட்சி (Is amazing view)'." சொல்லி முடித்து அனைவரும் பாராட்ட அவளே கை தட்டி பாராட்டிக் கொண்டு எனக்கு நன்றி தெரிவித்தாள்.

அதே சமயம் சியாமளா சற்றே கேலியான ஆச்சரியத்துடன், "சரி நீங்க கல்லாங்காய் எல்லாம் விளையாடுவீங்களா?"

மருத்துவரும், "ஆமாப்பா அதெல்லாம் பொன்னுங்க விளையாட்டாச்சே?"

நான், "சும்மா கொஞ்சக் கொஞ்சம் ஓரளவுக்குத்தான்; அது ஒண்ணும் அவ்ளோ கஷ்டமில்லையே." இடை இடையே அனிதா கேட்கும்போதோ அல்லது குழம்பித் தவிக்கும்போதோ அவளுக்கு விளக்கி உதவி வந்தேன்.

சியாமளா, "சவால் விட்டதைப் பார்த்தா நீங்க திறமையா ஆடுவீங்கன்னு நினைச்சேன்; பானு நல்லா ஆடுவாள் எங்களால அவளைத் தோற்கடிக்கவே முடியாது."

ஷீலா, "எதுக்கு வீணாக சவால் விடணும்?"

மருத்துவர், "நானும் தம்பி எல்லா விளைட்லையும் சூரன்னு நினைச்சேன்."

நான், "இல்லை டாக்டர்; பானுவை தோற்கடிப்பது என் உத்தேசம் இல்லை."

சியாமளா, "அப்டீன்னா எதுக்கு நீங்க அவளைத் தூண்டி விட்டீங்க!!."

நான், "உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு."

அனைவரும் புரியாமல் குழம்ப; அதே சமயம் அனிதாவுக்கு விளக்கி முடித்துப் பின், "எனக்கு வேண்டியது பானு தனிமைல சலிப்படையாம சந்தோஷமா இருக்கனும்; அந்த இலக்கை நான் சுலபமா அடைஞ்சிடுவேன்."

சியாமளா, "அதெப்டி?"

நான், "நீங்கதானே சொன்னீங்க பானு நல்ல திறமையா ஆடுவாங்கன்னு; அப்போ நிச்சையமா மண்டையப் பிச்சிக்கிட்டு பயிற்சி செய்துகிட்டிருப்பாங்க; நல்லா பொழுது போகும் அவுங்களுக்கு; அவ்ளோதான் எனக்குத் தேவை."

சொல்லி முடித்ததும் அத்தையும் மருத்துவரும் தனிச்சையாகச் செல்லமாக அடித்தனர்.

அதன் விளக்கம் கேட்ட அனிதாவுக்கும் விளக்கி முடிக்க அவள் சற்றே பலமாக அடித்து, "you're a Naughty Rascal."

அதற்குள் நம் பிரதான தளமான நீர் பாசனக் கால்வாயை நெருங்கி விட்ட ஷீலா, "அட யாரு இதை இவ்ளோ ஜம்முன்னு சரி செய்தது."

சியாமளா, "இவுருதான் சித்தி (என்னைச் சுட்டி) அவுங்க அத்தை தாண்ட கஷ்டப்பட்டதால உடனே பிரச்சினையைத் தீர்த்துட்டாரு." கேலியாச் சொல்லி நகைத்தாள்.

ஷீலா, "அதென்ன நான் மட்டும் தான் கஷ்டப்பட்டேனா உங்களுக்கெல்லாம் ரொம்பச் சுலபமா? எல்லாருக்கும் தானே கஷ்டம்."

நான் கிண்டலாக, "அட போங்க அத்தை உங்களுக்குச் சுலபமான வழி இருக்குறது தெரியலை; சியாமளாவுக்குத் தெரியும்."

புரிந்து கொண்ட சியாமளா, "ஐய்யோ! ஆளை விடுங்க சாமி; எனக்குத் தெரியாது." சொல்லித் தவிர்த்து ஒதுங்கினாள்.

நான், "எல்லாரும் வாங்க நான் காட்டுறேன்." அதிரடியாகச் சியாமளா என் வாயை மூட எத்தனிக்க; ஏதோ நகைச்சுவையான விஷயம் இருக்கிறதென மற்ற மூவரும் ஆவலாய் நோக்க; நான் அவர்களை நோக்கி, "எல்லாரும் வாங்க இந்தப்பக்கம்." என வழி காட்டித் தொடர்ந்தேன்.

சியாமளாவோ வேண்டாம் வேண்டாமென வெட்கப்பட்டுத் தடுக்க, "இதென்ன சியாமளா சின்ன விகடம் தானே அவுங்களும் கொஞ்சம் சிரிக்கட்டுமே, 'யாம் பெற்ற இன்பம் பெறட்டும் இந்த வையகம்'." சொல்லிச் சிரித்து அந்த வழியைக் காட்டினேன்.

அத்தை தெரிந்தவராய், "அது கொஞ்சம்... இல்ல ரொம்ப கஷ்டம்."

மருத்துவரும் அனிதாவும் அது சற்று ஆபத்தென ஒத்துக்கொள்ள; நான் அனிதாவை நோக்கி இது போன்ற ஒரு சுற்றுச் சூழலில் அவள் சியாமளா நிலையில் அதாவது ஒரு இந்தியக் கலாச்சார பண்பாட்டுப் பெண்ணாக என்ன செய்திருப்பாள் எனக் கேள்வி எழுப்பினேன்.

அவள் சற்றே யோசித்த பின்னர் அந்தப் பண்ணை வீடு இருக்கும் தூரத்தைக் கருத்தில் கொண்டால் அங்கிருந்து பார்ப்பதற்கு எதுவும் சரியாகத் தெரியாது எனவே உன்னை அனுப்பி நீ அங்கே போய்ச் சேரும் வரை பொறுத்து பின்னர் தான் அந்த வாய்க்காலில் இறங்கிக் கடப்பது சரியான தீர்வு என முடித்தாள்.

சியாமளா, "அதுக்கும் மேல அவரு செய்ததைக் கேளுங்க." என நான் அவளைத் தூக்கிக் கடந்த விதத்தை விளக்கி பெருமைப் பட்டுக்கொண்டாள்.

இதையெல்லாம் நான் அனிதாவுக்கு விளக்க; உடனே அனிதா நம் கலாச்சாரத்தையும் அதைக் கடைபிடிக்க சியாமளா மேற்கொண்ட வழிமுறையையும் அதற்கு நான் கையாண்ட தீர்வையும் வெகுவாகப் புகழ்ந்தாள் (ஆங்கிலத்தில்).

நான், "இதைத் தமிழில் நான் விளக்குறத விட டாக்டர் நீங்க சொன்னா நல்லா இருக்கும்." என சொல்ல அவரும் விளக்க அதைக் கேட்ட அத்தையும் சியாமளாவும் என்னைப் பற்றிப் பெருமை கொள்வதாக அனிதாவிடம் தெரிவிக்கும் படி மருத்துவரைக் கேட்டுக்கொண்டனர் அதற்குள்

அனிதா, "என்க்கு நல்லா புரிஞ்சி அம்மா."

ஒரு வழியாகப் பண்ணை வீட்டை அடைந்தோம்; கருத்தம்மா உடனடியாக விரைந்து சென்று ஆளுக்கொரு இளநீர் ஏற்பாடு செய்தாள்; இந்த முறையும் அதே சிறுவன் அதே ஓட்ட முடியாத மிதி வண்டியுடன் வந்து மிக லாவகமாக வெட்டி/சீவி கொடுத்தான்.

அவனைப் பாராட்ட விரும்பிய நான், "உன் பேரு என்ன தம்பி?" அவன் சிற்தும் சட்டை செய்யாமல் தன் வேலையை மட்டும் கவனித்தான்.

உடனே கருத்தம்மா அவன் தலையில் ஒரு குட்டு குட்டி எரிச்சலுடன், "மருவாதி தெரியாத கய்த! பேரு சொன்னா இன்னா?"

கடிந்துகொண்ட நான், "அட கருத்தம்மா நீங்க செய்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை." அந்தச் சிறுவனின் தலையை ஆதராக என்னுடன் அணைத்து, "ரொம்ப சாரிப்பா; மன்னிச்சிக்கோ தயவு செய்து கோச்சிக்காத." சொல்லிச் சமாதானப்படுத்த முதல் முறையாகப் பேசினான் அந்தச் சிறுவன், "பரவாயில்ல சார் அது அப்படி தான்."

அனிதா, "Oh he can speak? I thought he can't"

நான், "சரி தம்பி, நீ ரொம்ப நல்லா அற்புதமா அந்த இளநீய சீவிக் கொடுத்த உனக்கு ரொம்ப ரொம்ப நன்றி."

விளையாட்டாக சிரித்த சிறுவன், "ஐய்யே! இதுக்கு போய் டேங்ஸு (Thanks) எல்லாம் சொல்றீங்க! நான் போய்வரேன் சார்."

நான், "உங்க அப்பா அம்மாவுக்கும் எங்க நன்றி சொல்லுங்க."

சிறுவன், "ஐய்யோ! அவுங்கெல்லம் சிரிப்பாங்க." சிரித்துக் கொண்டே சென்றான்.

அதே சமயம் அனிதா வேகமாய் ஓடி அந்தச் சிறுவன் முன் நின்று இரு கை கூப்பி வணங்கி அந்தச் சிறுவன் உயரத்திற்குக் குனிந்து, "ரொம்பா நன்றி." சொல்ல அவன் வயிறு குலுங்கச் சிரித்தவாறு சென்றான்.

அனைவரும் இளநீரைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருக்க எனக்கு உடனே சியாமளாவுடன் நடந்த விபத்து நினைவுக்கு வர எனக்குச் சிரிப்பு வந்தது. தற்போது இத்தனை பெண்கள் இருக்கச் சரிவர முன்னேற்பாடு செய்யாவிட்டால் அதைப் போன்ற விபத்து மீண்டும் நடக்க வாய்ப்பு அதிகம் என உணர்ந்தேன்.

உடனடியாக அத்தை மற்றும் மருத்துவரை அணுகி பொம்பளைங்களுக்கும் ஆம்பளைக்கும் தனித்தனி மறைவிடம் ஒதுக்கீடு செய்து அறிவித்து விட யோசனை கூற; அதைப் புரிந்து கொண்ட இருவரும் நல்ல முன் யோசனை எனப் பாராட்டினர்.

நான், "அப்படி இல்லை அத்தை ஒரு முன் அனுபவத்தில் கத்து கிட்டப் பாடம் தான்."

ஷீலா, "அப்டியா அதென்ன கூத்துக் கொஞ்சம் சொல்லு கேப்போம்." ஆவலுடன் கேட்க

மற்றவர்களும் ஆவலாய் நோக்க அதே சமயம் மருத்துவர் சற்று புரிந்தவராய், "சங்கடமான விஷயமா இருந்தால் வேண்டாம்ப்பா!" ஆனால் மற்றவர்களுடன் சியாமளாவும் சேர்த்து ஆர்வம் காட்டினாள்.

வேறு வழியின்றிச் சற்றே மாற்றிச் செல்ல முடிவு செய்து, "கொஞ்சம் மானப் பிரச்சனை தான் ஆனால் பரவாயில்லை; எல்லாரும் கொஞ்சம் சிரிக்கலாமே." சொல்லிக் நேற்று நடந்த கதையை சற்றே மாற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.

"ஒரு மூனு நாலு வருஷத்துக்கு முன்பு கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு இடம் மற்றும் சூழ்நிலை ஆனால் நானும் என் நண்பனின் அக்கா; என்னை விட ஒரு நாலஞ்சி வயசு மூத்தவங்க; ரெண்டு பேரும் முதல் முறையாகச் சந்திச்சிக்குறோம்.

அவ்ளோ பெரிய இடத்தில் நாங்க ரெண்டு பேர் மட்டுமே தனியா விளையாடிகிட்டு இருந்தோம். அப்புறம் இதே மாதிரி பெரிசா ஆளுக்கொரு இளநீர் குடிச்சிட்டு பேசிக்கிட்டிருந்தோம். வயித்துக்குள்ள போன இளநீர் இந்த வயிறு வசதியில்லைன்னு இறக்கி விடச்சொல்லி ரொம்ப அடம் பிடிக்க,"

சியாமளா, "இதென்ன கதை! இளநீர் எப்படி."

நான், "அம்மா தாயே ஒண்ணக்கு (சிறிநீர் உந்துதல்) வந்ததைத் தான் அப்படி மறைமுகமாகச் சொல்லப் பார்த்தேன்; இன்னமும் விளக்கமா சொல்லனுமா?." கேலியாகக் கேட்டுத் தொடந்தேன். நான் அந்தப் அக்காகிட்ட சொல்லக் கூச்சப்பட்டு மெல்ல அவங்களுக்குத் தெரியாமல் வேறு பக்கமா சுத்தி கொஞ்சம் ஒரு மறைவிடத்துக்குப் போயிட்டேன்.

சுத்தி முத்தி பார்த்துகிட்டே; கண்ணுக்கெட்டிய தூரத்தில் அந்தப் பொன்னு இல்லைன்னு நிம்மதியாகத் திறந்து விட்டா(ல்)!... நான் யாருக்குத் தெரியக் கூடாதுன்னு இப்படி ஒளிஞ்சி மறைஞ்சி மறைச்சி திறந்து விட்டேனோ, எதிர் பாராத விதமா அவுங்க மேலயே இந்தக் குழாயைத் திறந்து விட்டுட்டேன்.

இதிலே வேடிக்கை என்னன்னா! அந்த இடம் ஒரு அஞ்சடி பள்ளமா இருந்தது; எங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்கக் கூச்சப்பட்டு; கடைசீல ஒரே இடத்தை புடிச்சி, மேல கீழன்னு; நான் மேல இருந்து பள்ளத்துல ஒண்ணுக்கு போக அது அவுங்க மேல முழுசா... ரொம்ப அசிங்கமா போயிடுச்சி. அதுல கத்துக்கிட்ட பாடம்தான்.

அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து ஓய்ந்த பின் சியாமளா என்னை நோக்கி, "நீங்க சொல்றதப் பார்த்தா கிட்டத்தட்ட நமக்கு நடந்தது அப்டியே தலைகீழா." நான் குறுக்கிட்டு தடுக்க முயன்று பலனின்றி அடக்கடவுளே என என் தலையில் கை வைத்துக்கொண்டேன்.

ஷீலா, "அதென்ன கூத்து தலைகீழா?." தொடர்ந்து சிரித்த வண்ணம் கேட்ட அத்தை என்னையும் சியாமளாவையும் நோக்க; அனைவரும் குழம்பி நோக்க; ஏதோ தவறி ஒலறி விட்டதைச் சற்றே தாமதமாக உணர்ந்து சியாமளா திருத் திருவென முழித்தவாறு என்னை நோக்கினாள்.

உடனடியாக உபாயம் ஏதும் தோன்றாமல் வேறு வழியின்றி, "சொல்லு தாயே சொல்லு நீயே சொல்லு அந்தக் கூத்தை." என்றேன்.

சியாமளா, "வந்து வந்து அது அவரு இப்ப சொன்ன மாதிரி நான் மேல இருந்து அவரு கீழ இருந்து." அவள் சொல்லத் தத்தளிப்பதை உணர்ந்து.

நான், "சரிசரி விடுங்க... என்னால முடிஞ்ச வரைக்கும் நடந்த கதையை மாத்தி அவுங்களுக்குச் சங்கடம் வரக்கூடாதுன்னு படாத பாடு பட்டு மறைச்சி சொன்னேன். இந்த அசட்டு பொன்னு இவ்ளோ அப்பாவியா இருப்பாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை; சரிசரி விடுங்க." சொல்லித் தவிர்க்க முயன்றேன்.

ஆனால் அத்தையோ விடாமல் கேட்க வேறு வழியின்றி, "இன்னும் என்ன தெரியனும் உங்களுக்கு; இப்ப நான் சொன்னதுல மேல இருந்தது சியாமளா கீழ இருந்தது நான் போதுமா?."

இதைக்கேட்டதும் ஷீலா, "என்ன இவள் உன் மேல ஒண்ணுக்கு." கட்டுக்கடங்காமல் சிரிப்பு வர அதே சமயம் சற்றே கோபமும் வர உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தவித்தாள் அத்தை.

மருத்துவர் சியாமளாவைக் கட்டி அனைத்து முத்தமிட்டவாறு, "ரொம்ப அப்பாவியா இருக்கியே செல்லம்." சொல்லி சற்றே அத்தையை மென்மையாகக் கண்டித்து, "சும்மா இரு ஷீலா போதும் அந்தக் குழந்தையைக் கேலி செய்யாதே."

அதைக் கேட்ட ஷீலா, "ஆமா தாவணி போட்ட எவ்ளோ பெரிய குழந்தை ஒரு ஆம்பள புள்ள மேல."

நான் குறுக்கிட்டு, "அத்தை ப்லீஸ்! ப்லீஸ்! தயவுசெய்து நிறுத்துங்க; அது முழுக்க முழுக்க என் தப்பு; பாவம் சியாமளா." சொல்லி அவள் கையைப் பற்றி, "இப்டியா என்னை மாட்டி விடுவீங்க; சுத்த மோசங்க நீங்க."

சியாமளா, "அட பரவாயில்லை ரகு; நீங்க உங்களை மட்டும் தப்பு சொல்லாதீங்க; நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து தெரியாம செய்தது தானே. பரவாயில்லை எல்லாரையும் சிரிக்க வெச்சோமே."

நான் வியப்பின் உச்சத்தில் என்னையும் மீறி அவளை அனிச்சையாய் அனைத்து, "அப்படி சொல்லுங்க சியாமு; அசித்திட்டீங்க (சொல்லி அத்தையை நோக்கி) அத்தை இப்ப நீங்க நல்லா சிரிக்கலாம்; நல்லா அனுபவிச்சி சிரிங்க." அப்பொழுதும் கட்டுப்படுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தார் அத்தை.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous