பாகம் 08: ஓநாய் வேட்டைக்கு வெகுமதி

Story Info
வலை விரித்த ஆட்சியர், கிணறு வெட்டப் பூதம் கிளம்ப
1.2k words
0
13
00

Part 67 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 08: ஓநாய் வேட்டைக்கு வெகுமதி

நான், "அது ஜமீன் மாமா பாணி; எனக்கு அதெல்லாம் எனக்குச் சரி பட்டு வராது; அவுங்க ஆசையா திட்டுறத கேக்குறதும் வேற இன்பம் மாமா; அதெல்லாம் உங்களுக்குப் புரியாது; தயவு செய்து நீங்க எதுவும் சொல்லாதீங்க; நான் பாத்துக்குறேன்." சொல்லிப் புறப்பட்டேன்.

அதே நேரத்தில் என் சித்தப்பா உள்ளே நுழைந்து என்னைப் பார்த்தவர் அதிர்ந்து "என்னடா நீ எப்படி இங்க வந்தே ஏதாவது பிரச்சினையா? (சொல்லி மாமாவை நோக்கிய வண்ணம்) இந்த இடம் எப்படித் தெரியும்? "

நான், "இல்லை மாமாவுக்கு ஏதோ கோப்புகள் ரொம்ப அவசரமா தேவைன்னு கேட்டார் ஆனால் அந்த நேரம் பார்த்து ஆளுங்க யாரும் இல்லைன்னு அத்தை ரொம்ப வருத்த பட்டாங்க சரின்னு நானே கொண்டு வந்துட்டேன்."

அவருக்கு வேண்டிய அளவு தகவல்களைச் சொல்லிச் சமாளிதேன். அதே சமயம் ஜமீன் மாமா மிகுந்த மகிழ்ச்சியில் எதையும் மறைக்க விரும்பாமல் சொல்ல முற்பட நான் அவரை மீண்டும் நினைவு கூர்ந்து முடிந்தவரை மறைக்க முயன்று கொண்டிருக்க

அதே சமயம் கந்தன் துரிதமாக, "சார் தாஸில்தார் வராரு."

என் சித்தப்பா, "சரி சரி வீட்ல எல்லாரும் சௌக்கியம்தானே வேற ஒண்ணும் செய்தி இல்லன்னா நீ புறப்படு."

அப்பாடா சரியான நேரத்தில் இந்தத் தாஸில்தார் வந்து காப்பாற்றினார் என நினைத்துத் தப்பித்தோம் பிழைத்தோமெனப் புறப்பட

என் சித்தப்பா, "டேய் நீ இப்படிப் போ." எனப் பின் பக்க வழியைச் சுட்ட

மாமா, "ஒண்ணும் தேவையில்ல மாப்ள நீ இங்கேயே இரு." சொல்லி என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள (நான் மீண்டும் மாமாவைக் கெஞ்ச) அதற்குள் தாஸில்தார் உள்ளே நுழைந்து விட அனைவரும் மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்க நான் மாமாவின் பின் சற்றே ஒளிந்தவாறு நின்றேன்.

தாஸில்தார் (என் சிற்றப்பாவை நோக்கி) உன் வீட்டு நிலைமைக்கு என் வருத்தம்; ஆனால் உனக்கு அடிக்கப் போவுது யோகம்; கூடிய சீக்கிரம் அந்த நல்ல சேய்தி உனக்கு வரும் கவலைப் படாதே. (மாமாவை நோக்கி) எனக்கும் முதல்ல புரியாம கத்திட்டேன் அப்புறம் கலெக்டர் நல்லா புரிய வெச்சாரு அவர் அந்தப் பையன் ஒரு அதிபுத்திசாலின்னு அவன்கிட்ட உடனே பேசியே ஆகனும்னு தீவிர உத்தரவு போட்டுட்டாரு (சொல்லி என் சிற்றப்பாவை நோக்க அவர் திருதிருவென முழிக்க) அதுதான் உன் அக்கா பையனோ/அண்ணன் பையனோ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ."

மாமா குறுக்கிட்டு, "இதோ இருக்கிறான் சார்."

நான், "வணக்கம் சார்."

தாஸில்தார், "அட இங்கதான் இருக்கியா தம்பி; கலக்டர் சார் உன் கிட்ட பேசனும்னு சொன்னார். நான்... சரி வாங்க அவருக்கு இப்ப நேரமிருக்கான்னு தெரியல. ஒரு முயற்சிசெய்து பார்ப்போம்." சொல்லி எங்களை அழைத்துக்கொண்டு மற்றொரு அலுவலகத்தை நோக்கிச் சென்றார்.

வழியில் எதுவும் புரியாத என் சித்தப்பா, "சார் இவன் எதுக்கு சார் கலக்டரை பாக்கனும்? என் வீட்டு நிலைமைன்னு ஏதோ; எனக்கு ஒண்ணும் புரியல."

தாஸில்தார், "யோவ் சும்மா இருய்யா; அந்தப் பையன் ஜகஜாலக்கில்லாடி; பிரமாதமா வேலை செய்து உனக்கு உத்தியோகத்தில் உயர வெச்சிருக்குறான்; இவ்ளோவும் செய்துட்டு எவ்ளோ அடக்கமா இருக்குறான்; (அதற்குள் போய்ச்சேர வேண்டிய அலுவலகத்தை அடைந்துவிட) சரிசரி நீங்க இங்கேயே காத்திருங்கள் நான் போய்,"

அவர் ஒரு குமாஸ்தாவை அழைத்து ஏதோ குசுகுசுக்க; அவரும் தலையாட்டி உள்ளே சென்று சில வினாடிகளில் வெளிவந்து எங்களை உள்ளே போக அனுமதித்தார். நாங்கள் உள்ளே நுழைந்து அனைவரும் வணங்கி நின்றோம். அந்தப் பெரிய அறையில் கிட்டத்தட்ட பத்து பதினைந்து அடி தூரத்தில் நின்றோம்.

ஆட்சியர், "அட எல்லாரும் இருக்கீங்களா நல்லது; பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்ததுக்கு எல்லாருக்கும் பாராட்டுக்கள்; குறிப்பா இப்படி வாங்கத் திரு ரகு."

நான், "(நான் துரிதமாக அவர் முன் சென்றவாறு) Sure Sir; I am privileged to meet honorable collector." சொல்லி இரு கைகளைக் கூப்பிச் சற்றே தலை வணங்க

ஆட்சியர், "Would you mind to describe me a little briefly gentleman; take your seat; and just a second (சொல்லி ஒரு பொத்தானை அழுத்திவிட்டு) மற்றவர்களை நோக்கி உங்கள் எல்லாருக்கும் நன்றி இப்படியே உங்கள் சேவையைத் தொடர வாழ்த்துக்கள் (அதற்குள் ஒரு குமாஸ்தா ஒரு காகித உறையை மரியாதையுடன் ஆட்சியரிடம் நீட்ட அவர் அதை வாங்கி) வாங்க மிஸ்டர் தாமோதரன் We are pleased to honor your service with this award." சொல்லி நீட்ட அதைப் பெரும் குழப்பம் நிறைந்த பதற்றத்துடன் வாங்கி நன்றி தெரிவித்த என் சிற்றப்பாவை நோக்கி, "அது என்னன்னு பார்க்கப் போவதில்லையா?"

பதற்றத்துடன் என் சித்தப்பா, "இதோ பாக்குறேன் சார்."

ஆட்சியர் என்னை நோக்கி, "Your uncle is promoted as Executive Deputy Tahsildar; வாழ்த்துக்கள் திரு தாமோதரன்."

ஆச்சிரிய அதிர்ச்சியில் என் சித்தப்பா மிகப் பதற்றத்துடன் நன்றி தெரிவித்தார்.

நான் எழுந்து நின்று அவருக்குக் கை குலுக்கி பாராட்டினேன்.

ஆட்சியர், "எல்லாரும் போய் நல்லா மகிழ்ச்சியா கொண்டாடுங்க; ஒரு ஐந்து நிமிடத்தில் ரகு உங்களோடு சேர்ந்துக்குவார் (மறைமுகமாக அவர்களெல்லாம் போகலாமெனச் சொல்லாமல் சொல்ல; அனைவரும் சென்றதும்) உங்களுக்கு மிக்க நன்றி ரகு; இப்போ அந்தப்பொன்னு எப்படி இருக்குறாங்க; அவுங்க மனநிலை எப்படி இருக்கு?"

நான், "அந்தப்பொன்னு நல்லா இருக்குறங்க சார்; நிச்சயமா ரொம்ப சந்தோஷமா முக்கியமா இந்த நிகழ்விலிருந்து நல்ல பாடம் கற்று தன் வாழ்க்கையை திருத்திக்கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக்கிட்டது ரொம்ப ஆச்சர்யம்."

ஆட்சியர், "கேட்க இனிமையாக இருக்கு ரகு; நாம அந்தப் பொன்னுக்கு கொஞ்சம் உதவி செய்து அவள் வாழ்க்கையில் முன்னேற வழி செய்வது நல்லதுன்னு நினைக்குறேன் அதனால."

நான் குறுக்கிட்டு, "மன்னிக்கனும் சார் நான் குறுக்கிடனும் (சொல் என கண் ஜாடை செய்ய) எனக்குத் தெரிந்தவரை இப்போதைய நிலைமையின் முழு விவரத்தை சொல்லுறேன். நான் செய்த முழு நாடகத்தை முழுமையாக விளக்கிய பின்னும் அந்தப்பொன்னு என்னை கடவுளாக மதிக்குது. ஆனால் அதே சமயம் நான் பண உதவி செய்தால் ஏற்றுக்கொள்ள மறுக்குறாங்க. அவுங்களுக்கு படித்து முன்னேறுவதில் அளவில்லாத நம்பிக்கையும் ஆசையும் வந்திடுச்சி அதுக்கு மட்டும்தான் என் உதவியை எதிர்பார்க்குறாங்க. மற்ற எந்த உதவியையும் ஏற்க மறுக்கிறாங்க. அந்த உதவியை செய்ய நான் முழுவாக்குறுதி கொடுத்துட்டேன் அதை நிச்சயம் செய்வேன். அதில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் நிச்சயம் நான் உங்களை அணுகுவேன். இப்போதைக்கு அந்தபொன்னு வேற எந்த உதவியையும் ஏற்க விரும்பவில்லை."

ஆட்சியர், "ம்ம்ம் நல்ல சுவாரசியமா இருக்கு; சரி எனக்கு ஒரே ஒரு கேள்வி... அதாவது அந்தப் பொன்னை பூவனூர் கிராம அதிகாரியைத் தவிர மற்றவர்கள் வேறு யாராவது குறிப்பாக உயர் அதிகாரிங்க யாராவது தொந்தரவு செய்திருந்தால் அதை பயந்து மறைக்க அவசியமைல்லைன்னு," (இதுதான் விஷயம்னு நான் எதிர்பார்த்தேன்)

நான், "நல்லாப் புரியுது சார் என்னால் முடிந்தவரை அவளை விசாரித்ததில் அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் என் சிற்றப்பா மற்றும் மாமாவைத்தவிர மற்றவர்களை அடையாளம் தெரியவில்லைன்னு தெரியுது. ஆனால் அவள் யூகம் ஏதோ அரசாங்க உயர் அதிகாரிங்களா இருக்கும்ன்னு சொல்லுறாங்க. அதுக்கும் மேல தன் இன்றைய வாக்கை சூழலை முற்றிலும் வெறுத்து ஒதுக்கி அதை ஒரு கெட்டக் கனவாக மறந்து நல்ல ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு மாறித்தொடர்வதில் முழு மூச்சாக இருக்கிறாங்க. அதனால அதைப்பற்றி கவலை கொள்ளத் தேவையில்லைன்னு நான் நினைக்குறேன்."

ஆட்சியர், "அட கேட்க ரொம்ப இனிமையாக இருக்கே; நிச்சயமாக நாம, நான் அதுக்கு முழு ஆதரவுத் தரத்தயார்."

நான், "நான் கவனித்தவரை அவள் என் மேல் அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தாலும் என்னிடமிருந்து எந்த ஒரு தனிப்பட்ட பண உதவியோ மற்ற முறையற்ற உதவிகளையோ ஏற்க விருப்பமின்றி நியாமான சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட முறையில் உதவுவதையே மட்டும் ஏற்கத்தயாராக இருக்கிறாள்; இப்படி ஒரு வித திடீர் திருப்பம் எனக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. நிச்சயமாக அவள் படித்து முன்னேறும் முழுப்பொறுப்பையும் நான் ஏற்று கவனிச்சுக்குறேன். தேவை ஏற்படும் பட்சத்தில் நிச்சயமாக உங்களை அணுகுவேன்; இது என் உறுதி மொழி."

ஆட்சியர், "அட ரொம்ப பிரமாதமான நல்ல செய்தி; அருமை; நிச்சயமா நாம அவளுக்கு படித்து முன்னேற உதவி செய்யலாம்/செய்வோம்; உனக்கு என் மனமார்ந்த நன்றி இளம் வாலிபனே."

நான் உடனே எழுந்து அவரை மிகத் தாழ்மையுடன் வணங்கி, "ஐயா உங்கள் மனதில் நல் மதிப்பு பெற்றதில் எனக்கு மிகவும் பெருமிதம்."

ஆட்சியர், "இல்லை வாலிபரே நாங்கதான் உனக்கு மிக்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்; சரி இருக்கட்டும்; நீங்க உங்க படிப்பு வாழ்க்கை முன்னேற்றத்திட்டம் பற்றி நான் தெரிஞ்சிக்கலாமா?"

நான், "நிச்சயமாக ஐயா; நான் என் இயந்திரவியலில் இறுதி ஆண்டு படித்துக்கிட்டிருக்கேன்."

ஆட்சியர், "அடடா உன்னைப்போன்ற நிர்வாக புத்தி கூர்மையானவர்கள் விஞ்ஞானத்திற்கு சென்றுவிட்டால் நிர்வாகவியல் திறமையான ஆட்களை இழந்து தவிக்கிறதே வாலிபனே? விஞ்ஞானம்தான் உன் உணர்ச்சி பூர்வமான விருப்பமா?"

நான் சறிதும் தாமதிக்காமல், "ஆமாம் ஐயா எனக்கு அதில் அதிக விருப்பம்."

ஆட்சியர், "அடடா உன்னைப்போன்ற நிர்வாக/ஆளுமைத் திறமைசாலிகள் இப்படி வழிவிலகிப்போவது சரியல்ல; எனக்கு உன்னைப்போன்ற திறமைசாலிகள் நம் நாட்டு நிர்வாக/ஆளுமைக்கு மிகவும் அவசியம்; நீ உடனடியாக என் அணியில் சேர்ந்து ஒரு பொறுப்பான நிலையேற்று நடத்த விரும்பினால் மிகவும் நல்லது."

நான், "மிக்க நன்றி ஐயா; ஆனால் என்னை விஞ்ஞான வழியில் என் பங்கை ஆற்ற வழி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்."

ஆட்சியர், "அடடா! என்ன ஒரு பரிதாபம்; சரி இதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும்; சரி உன்னுடைய முடிவை நான் மதிக்கிறேன்; அதே சமயம் நீ கொஞ்சம் நிதானமாக ஆழ யோசித்தாள் முடிவை மாற்றிக்கொள்வாய் என நம்புகிறேன். நீ எப்போது நினைத்தாலும் என் அணியில் சேர உனக்காக இந்த வாயில் எப்போதும் திறந்திருக்கும்; குறிப்பாக நீ தலையிட்டு தீர்த்து வைத்த பிரச்சினையைப்போல எண்ணிலடங்காத சம்பவங்கள் தினமும் நடக்கிறது. அதிலிருந்து இந்த சமூகத்தை குறிப்பாக ஏழைகளை காப்பாற்றுவது மிக முக்கிய பங்கு என நீ நினைத்தால்; உன் முடிவை மாற்றி சேவை செய்ய வருவாய் என நம்புகிறேன்; நன்றாக யோசித்து செயல்படு; நான் உன்னை வற்புறுத்தமாட்டேன்; நன்றி."

அவர் குறிப்பிட்ட சொல் மற்றும் சொல்லிய விதம் என் மனதை சற்றே யோசிக்க வைக்க நான், "உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி ஐயா; அனுபவமற்ற எனக்கு தாங்கள் இந்த அளவுக்கு எனக்கு முக்கியத்துவம் அளிப்பது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது; அனால் அதே சமயம் தாங்கள் குறிப்பிடுவதை என்னால் உணர முடிகிறது. நான் நிச்சயம் நன்றாக யோசித்து செயல்படுவேன்; மீண்டும் மிக்க நன்றி." நீண்ட உரையாடலுக்குப் பின் ஒரு வழியாக நன்றி தெரிவித்து விடைபெற்று மாமா அலுவலகத்தை அடைந்தேன். அங்கு எதிர்பாராத விதமாக அந்தத் தாஸில்தாரும் காத்திருக்க; நான் செய்வதறியாமல் திகைத்தேன்.

தாஸில்தார், "என்ன தம்பி கலக்டர் சார் என்ன சொன்னார் என்ன கேட்டார்?"

நான், "என்னை அவருக்கு ரொம்பப் புடிச்சிப்போச்சி அவர் எனக்கு நல்ல திறமை இருக்குன்னு நம்புறதினால எனக்கு நல்ல பதவி கொடுத்து என்னை அவர் கீழ வேலை செய்யச் சொல்லுறார்."

திடுக்கிட்ட தாஸில்தார், "என்ன பதவின்னு சொன்னார்?"

நான், "அதெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லலை; தகுந்த பதவின்னு சொன்னார்."

தாஸில்தார், "நீ என்ன சொன்னே?"

நான், "நான் ரொம்பச் சின்னப் பையன் இப்பத்தான் இளங்கலை பட்டம் படிச்சிக்கிட்டு இருக்கேன் அடுத்து முதுகலை படித்து முடித்த பிறகு வருகிறேன்னு சொல்லிட்டேன்."

தாஸில்தார், "அந்தப் பொன்னைப் பத்தி எதுவும் கேக்கலையா?"

என் மனதுக்குள் 'அட லூஸுப்பையா; இப்படி ஏடாகூடமா கேள்வி கேட்டுட்டானே இப்ப எப்படிச் சமாளிக்கிறது' என யோசிக்க, "இல்லையே அப்படி எதுவும் கேக்கல."

தாஸில்தார், "அட அதுதானே முக்கியமா கேட்டிருக்கவேண்டும்!.. (சற்று யோசித்து மீண்டும்) அவர் நிச்சயமா ஸ்ரீஷாவை நீ மடக்குனதப் பத்தி எதுவும் கேக்கலையா?"

என் மனதுக்குள் 'அட உலகமகா லூஸே இப்படிப் போட்டு ஒடச்சிட்டேயே' சரி சமாளிப்போம். இப்போதான் புரியுது இது மாதிரி லூஸுங்களையெல்லாம் தாஸில்தாராக வெச்சிக்கிட்டு இந்த ஆட்சியர் படும் பாடு என்னன்னு; அதுக்குத்தான் என்னை விடமாட்டேங்குறார் அவர்; சரி சமாளிப்போம்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous