உங்களில் ஒருத்தி 11

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

எனக்காக ரொம்ப அலையுறீங்க. கார்ன் சாப்பிடுறீங்களா.. என்றாள். காற்றில் கூந்தல் பறக்க, அழகாக ஒதுக்கிவிட்டுக்கொண்டே கேட்டாள்.

எஸ். சாப்பிடலாமே...

அவர்கள் grilled corn வாங்கினார்கள். அவள் விரல்களால் பிய்த்து பிய்த்து வாய்க்குள் போட்டாள்.

கடிச்சி சாப்பிட மாட்டீங்களா.. என்று கேட்டுக்கொண்டே அவன் ஒரு இடத்தில் உட்கார்ந்தான். அவள் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். காற்றில் துப்பட்டா பறக்க, அவள் தன் கட்டி முலைகளை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள். அப்புறம்... அப்படியே விட்டுவிட்டாள்.

அதற்குள் பாதியை காலி செய்துவிட்ட சீனுவைப் பார்த்தாள். இப்படி சாப்பிட்டா நிறைய வேஸ்ட் ஆகிடும், சாப்பிட்ட மாதிரியே இருக்காது என்றாள்.

எனக்கு பொறுமை இல்லையே. அப்படியே பொறுமையாய் எடுத்தாலும் எனக்கு வராது என்றான். அவள் அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள். க்யூட்டாக இருந்தாள்.

திருமணமான பெண்களின் வெட்கத்தை... பாவனைகளை... அழகை மட்டுமே பார்த்துப் பார்த்து பழகியிருந்த சீனுவுக்கு அவள் புதிதாக இருந்தாள். இளமை பொங்கும் அழகோடு, பளிச்சென்று இருந்தாள். உதடுகளில் அப்படி ஒரு கவர்ச்சி.

எழுந்து நடந்தார்கள். அவன் அவளுடைய காதல் கதையைக் கேட்டான். அவள் பேசிக்கொன்டே நடந்தாள். அவளது டாப்ஸ், இடுப்புவரை ஓப்பனிங்க் இருந்ததால் காற்றுக்கு அடிக்கடி தூக்க, அவள் முன்னும் பின்னுமாக டாப்ஸை பிடித்துவிட்டுக்கொண்டே வந்தாள்.

காற்று ரொம்ப அடிக்குது. உட்கார்ந்து பேசுவோமா? என்றான். தன் ஆடை விலகுவதை அவன் விரும்பவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். மகிழ்ந்தாள். சந்தோஷத்தில், தண்ணீரில் கால் வைத்து விளையாண்டாள்.

சீனுவுக்கு நிஷாவின் ஞாபகம் வந்தது. அவனை வாட்டியது. அவன் நினைவைக் கலைப்பதுபோல், போன் தண்ணில விழுந்துடுச்சு சீனு.... என்று உதட்டைப் பிதுங்கிக்கொண்டு அகல்யா வந்தாள்.

பதட்டத்தில், என்கிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கலாம்ல... லூசு... என்று திட்டிக்கொண்டே சீனு வேகம் வேகமாக அதை தன் சட்டையில் துடைத்தான். கர்ச்சீப் வைத்து ஒற்றி எடுத்தான். போன் ஹேங்க் ஆகியிருந்தது. அவர்கள் பீச்சிலிருந்து வரும்வரை அவன் அவள் போனோடுதான் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான். அகல்யா, வருத்தத்தோடு, அமைதியாக நடந்துவந்துகொண்டிருந்தாள்.

ரெஸ்டாரண்ட் போகும் வழியில், ஒரு ஷோ ரூம் இருந்தது. உள்ளே நுழைந்தான். அகல்யாவிடம் சொன்னான்.

ட்ரெஸ் எடுத்துக்கோங்க

மறுபடியுமா?

எஸ். அன்னைக்கு.. .ஏதாவது எடுக்காம மிஸ் பண்ணியிருந்தீங்கன்னா.... எடுத்துக்கோங்க. நான் பணம் வச்சிருக்கேன்.. என்றான்.

ம்... என்றவள், தேடித்தேடி, அவளுக்கொரு டாப்ஸும், அவனுக்கொரு டி ஷர்ட்டும், அவனுக்கு ஒரு cap - ம் எடுத்துக்கொண்டு வந்தாள். அவனது கார்டைக் கொண்டு போய் பில் போட்டாள். கார்டையும் பில்லையும் இவனிடம் கொண்டுவந்து கொடுத்தாள்.

பில்லைப் பார்த்தவன், அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் வெகுளித்தனமாக, பாவமாக நின்றுகொண்டிருந்தாள். மற்ற பெண்களிடம் பேசுவதுபோல் சீனுவுக்கு அவளிடம் பேச்சு வரவில்லை. எல்லாவற்றுக்கும் தயக்கமாக இருந்தது.

என்னாச்சு? என்றாள் அகல்யா.

இன்னர்ஸ் எடுத்துக்க வேண்டியதுதானே. ஏன் இப்படி பண்ற?

அகல்யா - இடது கையை மார்புகளுக்குக் கீழே குறுக்காக வைத்துக்கொண்டு, வலது கையால் தொங்கட்டத்தை தடவிப்பார்த்துக்கொண்டே, தலை குனிந்து நின்றாள். சிறிது நேரம் கழித்து, அவனை நிமிர்ந்து பார்த்தாள். தன் அழகிய கண்களால், அவனை நேருக்கு நேர் பார்த்தாள். அவன் கையிலிருந்த கார்டை.. வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, கடைக்குள் போனாள்.

இங்கே -

நிஷாவுக்கு, அவள் அத்தை லட்சுமி, வீட்டின் முதல் தளத்தை ரெடி பண்ணிக் கொடுத்தாள். கதிருக்கு, தான் முன்புபோல ப்ரீயாக இருக்க முடியாது என்பதில் வருத்தம். வீட்டின் நடுவில்.. பெரிய முற்றத்தில் இருந்த கிணற்றில்.... முன்பெல்லாம் நினைத்த நேரம் குளிக்கலாம். இனிமேல் முடியாது.

நிஷா இப்படி தனியா தங்கினா ஊர் உலகம் என்ன சொல்லும்? என்றான். அப்பா வேறு ஒரு அடிதடி சண்டை விஷயத்தில் ஜெயிலில் இருந்தார்.

அவ இந்த ஊர் பொண்ணுடா. நம்ம ரத்தம். அவளை வேற எங்கயாவது தனியா தங்கவெச்சாதான் ஊர்க்காரங்க தப்பா நினைப்பாங்க. சின்ன வயசுல அவ எனக்கு எவ்ளோ செல்லம் தெரியுமா? அவமட்டும் இப்படி சீரழியாம இருந்திருந்தா, முன்னாடியே அவங்க நம்ம உறவெல்லாம் வேணும்னு நெனச்சிருந்தா... உன்னை அவளையே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியிருப்பேன். ஹ்ம்... என்னென்னவோ நடந்துடுச்சு. இனிமே இவ வாழ்க்கை என்னாகுமோ. ஸ்கூல்லயே அவளுக்கேத்த ஒரு நல்ல மாப்பிள்ளை அமைஞ்சிட்டா கூட நல்லாயிருக்கும்.

அதப்பத்தி நீ ஏன் கவலைப்படுற. அங்க ராஜ் நிஷாவுக்கு கண்டிப்பா ஒரு நல்ல பையனை ரெடி பண்ணிடுவான். நாமளும் ட்ரை பண்ணுவோம்.

அவனுக்கு, நிஷாவோடு பேசவே விருப்பம் இல்லாமல் இருந்தது.

மறுநாள் காலை -

நிஷா, நேர்த்தியாக புடவை கட்டிக்கொண்டு, கையில் புத்தகத்தோடு கீழே இறங்கி வர, என்னதான் அவள்மேல் வெறுப்பில் இருந்தாலும், கதிரால் அவளை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. கண்களை அவளிடமிருந்து எடுக்க முடியாமல் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆடு, மாடு, தீவனம், ஏர், கலப்பை, வைக்கோல், கோழிகள் என்று இருந்த அந்த வீட்டுக்குள் திடீரென்று ஒரு தேவதை இறங்கி வந்ததுபோல் இருந்தது.

ப்ப்ப்பா.... எவ்வளவு அழகு! இறைவா...! இந்த அழகு களங்கப்படாமல் இருந்திருக்கக்கூடாதா.

கதிர் ஆல்ரெடி வயலுக்கு ஒருமுறை போய்விட்டு வந்திருந்தான். குளிப்பதற்கெல்லாம் இந்த நேரம்தான் என்று கிடையாது. எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். அது அவனுக்குப் பிடிக்கும். அங்கே அவனே ராஜா. அவனே மந்திரி.

தன் விஷயம் தெரிந்தபின்னும் தன்மேல் அளவில்லாத பாசத்தோடு இருக்கும் அத்தை லட்சுமியை பார்க்க நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள்மேல் மிகுந்த மரியாதை வந்தது. என்னை வாழ்த்தி அனுப்புங்க அத்தை... என்று கும்பிட்டபடி நின்றாள். லட்சுமி, சாமி கும்பிட்டு அவளுக்கு திருநீறு பூசிவிட்டு, கூட்டி வந்தாள்.

கதிரு.. போய் நிஷாவை ஸ்கூல்ல விட்டுட்டு, ஹெட் மாஸ்டரையும் பார்த்து சொல்லிட்டு வந்துடு. முன்னாடியே அண்ணன் எல்லார்கிட்டயும் சொல்லிட்டான். மரியாதையாத்தான் நடந்துப்பாங்க. நீயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடு.

ந.. நான் எப்படிம்மா? ப்ரண்டுகிட்ட கார் கேட்டிருக்கேன். இப்போ வந்துடுவான்.

கதிர், பார்ப்பதற்கு பருத்திவீரன் கார்த்தி சாயலில் இருந்தான். முடிகள் கண்டபடி அலைந்து கிடந்தன. முதல் முறையாக கைலியை இறக்கிவிட்டிருந்தான்.

கார்லாம் வேணாம்டா. அப்புறம் நிஷா சம்பாரிக்கறதே எங்களாலதான்னு சொல்லுவானுங்க. பிள்ளையை அடிக்காதேன்னு அவகிட்ட போய் நிப்பானுங்க

நிஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. அத்தையின் பேச்சை ரசித்துப் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

அதனால? நடந்தே போகச்சொல்லுறியா?

ஏலேய்... உன் பைக்ல கூட்டிட்டுப் போ

ஏம்மா அதெல்லாம் ஒரு பைக்கா? கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசமாட்டியா? என்று கதிர் பாவமாய் கேட்க, அவன் காட்டிய திசையில்... வாசலுக்கருகில்... குப்பையாய் நின்றுகொண்டிருந்த splendor plus ஐ பார்த்து, நிஷாவுக்கு உதட்டுக்குள் புன்னகை அரும்பியது.

அது புது வீடு. ஆனால் எல்லாமே தூசியாகத்தான் இருந்தது. அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருந்த அவளது ரூம் மற்றும் பாத்ரூம் தவிர. அது பெரிய வீடு. கிட்சன் தனியாக.. அதுவே ஒரு தனி வீடுபோல் இருந்தது. பாத் ரூம்கள் பின்புறம் தோட்டத்தோடு சேர்த்து இருந்தது. மரங்களுக்குப் பஞ்சமில்லை. இவர்கள் வானம் பார்த்த முற்றத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். பெட் ரூம்கள் தனி வீட்டில் தனியாக இருந்தன. வாசலில்.. உள்ளே நுழைந்ததும் நிலத்தில் விளைந்த பொருட்கள் போட்டு வைத்திருக்க ஒரு பெரிய அறை. ஸ்டோர் ரூம் ஒன்று. சுருக்கமாக சொல்லப்போனால் அங்கே ஒரு 10 குடும்பமாவது வசிக்கலாம்.

சோம்பேறி... அதை துடைச்சு வையேண்டா.... - அம்மாக்காரி கத்தினாள்.

கதிர், அம்மாவை முறைத்துக்கொண்டே... வண்டியை துடைப்பதற்காக ஒரு துணியை எடுத்தான். எத்தனை தடவைதான் குளத்தில் முக்கியெடுப்பது? பத்து நிமிஷத்தில் மறுபடியும் குப்பையாகிடும்!பைக் பக்கத்தில் சென்று, துடைக்கும் முன், ஒரு உதறு உதறினான். துடைக்கக் கொண்டுவந்த அந்தத் துணியிலிருந்தும் தூசி பறக்க.... மானம் போகுதே என்று அதை ஸ்டைலாகத் தூக்கிப் போட்டான். இதைப் பார்த்த நிஷாவுக்கு சீனுவின் ஞாபகம் வந்தது.

பரவால்ல கதிர். நாம இதுலயே போகலாம். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. என்றாள். அதில் உட்காரப்போனாள்.

நிஷா.. நில்லுங்க நில்லுங்க.... இவ்ளோ அழகா புடவை கட்டிக்கிட்டு....என்று சொல்லிக்கொண்டே கதிர் ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து பைக் மேல் ஊற்றினான். வேகம் வேகமாக தனது டவலை எடுத்துத் துடைத்தான்.

இவ்ளோ அழகா புடவை கட்டிக்கிட்டு... என்று பேச்சுவாக்கில் அவன் சென்னை வார்த்தை, நிஷாவுக்கு சட்டென்று ஒரு சிறிய சந்தோஷத்தைக் கொடுத்தது. பைக் பக்கத்தில் வந்து நின்றாள். அவளுக்கு, சீனுவோடு பைக்கில் போன காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. கண்களை மூடிக்கொண்டாள். எப்படி இதிலிருந்து மீளப்போகிறேன்... கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

நிஷா.. போலாமா? என்றான் கதிர்

ம்....

அவள் தன் பின்னழகுகளை அதில் வைத்து உட்கார்ந்தாள். கதிர் அவளை பூப்போல கொண்டு போய் இறக்கிவிட்டான். நிஷா அந்த ஸ்கூலுக்குள் நுழைந்தாள். மனதுக்குப் பிடித்த வேலை. சொந்த ஊர் மண்வாசம். சிறுவயது நிஷாவைப் பார்ப்பதுபோல் சிறுவர்கள் சிறுமிகள். மாணவர்கள் மாணவிகள். அவள் தன்னை மறந்தாள். அப்பாவை, அம்மாவை, ராஜ்ஜை, சீனுவை, தீபாவை, கண்ணனை, மலரை... என்று அனைவரையும் மறந்தாள். சந்தோஷமாக பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

வீட்டுக்கு வந்த கதிர், சாப்பிட்டுவிட்டு டிராக்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போனான். ஈவினிங்க் களைப்போடு திரும்ப வந்தபோது அம்மா கோபமாக இருந்தாள்.

ஏண்டா போனையே எடுக்கல. நிஷா பாவம் வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்துட்டு, போன் பண்ணியும் நீ எடுக்கலைன்னு நடந்தே வந்திருக்கா... என்றாள் லக்ஷ்மி. ஊர்ல அவளுக்கு எல்லா இடமும் தெரியுறவரைக்கும் நீ கொஞ்சம் பார்த்துக்கக்கூடாதா... ஐயோ அண்ணன் கேட்டா நான் என்ன சொல்லுவேன்

ஏம்மா நான்தான் வேலையா இருக்கும்போது போனை வண்டியிலேயே வச்சிருப்பேன்னு உனக்கு தெரியாதா

முகம் கழுவிவிட்டு வந்த நிஷாவுக்கு, கதிரின் அலட்சியம் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. கண்டவன் கூட படுத்தவதானே என்கிற எண்ணம் இருக்கும். அவன் இந்தளவுக்கு மரியாதையோடு நடந்துக்கறதே பெரிய விஷயம்.

நிஷா எதுவும் சொல்லாமல் உள்ளே போய்விட்டாள்.

லக்ஷ்மிக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. கோபத்தோடு மகனைப் பார்த்தாள்.

ஈவினிங்க் அவளை கூப்பிட வரமாட்டேன் என்பதை முதலிலேயே சொல்லியிருக்கவேண்டும். அலட்சியமாக இருந்தது தவறுதான் என்று கதிருக்கும் வருத்தமாக இருந்தது. தூங்குவதற்கு முன், அவளிடம் ஸாரி கேட்பதற்காக மேலே அவள் ரூமுக்குச் சென்றான். அதிர்ந்தான்.

அங்கே நிஷா தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டு படுத்திருந்தாள்.

கதிர் பதறிக்கொண்டு ஓடினான். நிஷா... என்னாச்சு? ஏன் அழறீங்க? நிஷா ப்ளீஸ்.....ஐயோ நான் பண்ணது தப்புதான். இப்படி அழறீங்களே முதல்ல அழுறதை நிறுத்துங்க....

அவளோ நிறுத்தாமல் அழ, கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு, அம்மா... அம்மா... என்று கீழே ஓடினான்.

லக்ஷ்மி மேலே ஓடி வந்தாள். நிஷாவை வாரி இழுத்து அணைத்துக்கொண்டாள். இந்த சின்ன விஷயத்துக்கு ஏம்மா அழுற? என்று தடவிக்கொடுத்தாள். பின்னால் வந்து நின்ற கதிருக்கு வேதனையாக இருந்தது.

அழுகையை நிறுத்த முடியாமல்... லட்சுமியிடம் ஏதோ சொல்ல வந்த நிஷா, அதை நிறுத்திவிட்டு, நிமிர்ந்து கதிரைப் பார்க்க, லக்ஷ்மி கதிரிடம் சொன்னாள்.

டேய்... கீழ போ

கதிர் மெதுவாக கீழே இறங்கிப் போனதும், லக்ஷ்மி நிஷாவிடம் சொன்னாள். அழாதடா செல்லம். இதுக்கெல்லாமா அழுவாங்க? நாளைலேர்ந்து அவனை உன்ன ஒழுங்கா கொண்டுபோய் விட்டுட்டு, ஒழுங்கா கொண்டுவந்து விடச்சொல்றேன்.

நான் அதுக்காக அழலை அத்தை. கதிர் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல

அப்புறம் என்னடா பிரச்சனை?

என்னால வீட்டுல எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்? நான் தப்பு பண்ணிட்டேனே அத்தை. எப்படி மூளை மழுங்கி இப்படியெல்லாம் பண்ணேன்னு எனக்கே தெரியல. ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டு, இப்போ இன்னொரு மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காரு அப்பா. எல்லாம் என்னாலதான? இத நெனச்சாலே எனக்கு அழுகை வந்துடுது

லக்ஷ்மி அவளை அணைத்துக்கொண்டாள். சமாதானம் சொல்லி தூங்க வைத்தாள். அண்ணனுக்கு போன் பண்ணி சொன்னாள்.

அவ இங்கயும் அவ ரூம்ல அழுத்துட்டுதான் கிடந்தா. அந்த ஊர் சூழ்நிலை அவளுக்கு இதமா இருக்கும்னு நெனச்சேனே... அங்க வந்தும் அழுறாளா... என்றார். பெருமூச்சு விட்டார். ஆம்பளை பசங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடுறாங்க. பொண்ணுங்க வாழ்க்கை இப்படி கிடந்தது சீரழியுதே

அந்தக் காலை - சோகமாக விடிந்தது.

லக்ஷ்மி கதிரிடம் எல்லாவற்றையும் சொல்லியிருந்தாள். அவன் பைக்கை நன்றாக கழுவி துடைத்து, சீட் கவர் மாற்றி வைத்திருந்தான். கீழே இறங்கி வந்த நிஷா நேராக பைக்குக்கு சென்றாள்.

எதுவும் சாப்பிடாம போறியேம்மா?

பசிக்கலை அத்தை. உங்களை கஷ்டப்படுத்துறேனா?

என்னம்மா இப்படி கேட்டுட்ட? கதிரு... நிஷாவை கொன்டுபோய் விடு. போனை உன் சட்டலையே வச்சுக்க

சரிம்மா....

ஸ்கூலில் - அவள் இறங்கியதும் சொன்னான். ஸாரி நிஷா

நான் அதுக்காக அழலை. தப்பா எடுத்துக்காதீங்க கதிர்

சொல்லிவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். கதிர், இதற்குமுன் தான் பார்த்து ரசித்த நிஷாவை எங்கே? என்று தேடிக்கொண்டிருந்தான். அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

அடுத்தடுத்த சில நாட்களில் - நிஷா தன்னால் முடிந்த அளவுக்கு, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினாள். ஸ்கூல் முடிந்து வந்த பிறகு, ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். TNPSC, UPSC, RRB என்று விதம் விதமான தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்று அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். அவரவர்களின் படிப்பை கேட்டறிந்து, அவர்கள் என்னென்ன வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுத்தாள்.

அதில் ஒரு மாணவன், கதிர் அண்ணா இந்த ஊர்ல சந்தோஷமாத்தானே இருக்கார். நான் அவரை மாதிரி இருந்துட்டுப் போறேனே எதுக்கு வெளியூர்ல போய் வேலை பார்க்கணும்... என்க, அவளுக்கு கதிரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

ஒரு வாரத்தில், அவள் அந்த ஊரில் அனைவருக்கும் தெரிந்தவள் ஆனாள்.

அடுத்து நிஷாவோடு பைக்கில் வரும்போதெல்லாம் அவன் ஸ்ப்ளெண்டரை சைக்கிள் போல் ஓட்டவேண்டியிருந்தது. வரும் வழியெல்லாம்,

டீச்சர் நல்லாயிருக்கீங்களா

டீச்சரம்மா நீங்க நல்லா சொல்லிக்கொடுக்குறீங்களாமே

குட் ஈவினிங்க் டீச்சர்!

என்னம்மா நிஷா ஊர்ல உங்கப்பன் நல்லாயிருக்கானா

இவ்ளோ நாளா எங்கம்மா இருந்த. இப்போதான் புள்ளைங்க இங்கிலிஷ் பேச ஆரம்பிச்சிருக்கு...

நீ வந்தபிறகுதான்மா என் மகனும் ஒரு வேலைல சேர்ந்துடுவான்னு நம்பிக்கை வந்திருக்கு...

ஒரு பெரிசு, நிஷாவிடமே போன் வாங்கி, மோகனுக்கு கால் பண்ணியது. டேய்.. நீ இந்த ஊருக்கு நல்லது எதுவும் செய்யலைன்னு நெனச்சேன். உன் பொண்ணு..... அத சரி செஞ்சிட்டாடா

கதிர் கண்கள் விரிய அவளைப் பார்த்தான். இரவில், தூங்கும்போது அவனுக்குள் சில கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்ததன.

மனிதர்களை, அவர்களது தவறுகளை மட்டும் வைத்து எடைபோடுவது சரியா தவறா

மனிதர்களை, அவர்களது past-ஐ வைத்து, இவர்கள் இப்படித்தான் என்று எடைபோடுவது சரியா தவறா

சரியா தவறா

சரியா தவறா

சரியா தவறா

அவன் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது கதிர்... கதிர்.. என்று நிஷா தயங்கித் தயங்கி கூப்பிடும் சத்தம் கேட்டது.

என்ன நிஷா?

உங்க போன் என்னாச்சு? ஆப்னு வருதாமே

ஆமா... கவனிக்கல

தீபா உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க.

போனை கொடுத்துவிட்டு, அமைதியாக போய் முற்றத்து கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள். விரைவில் தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்கும். வருகிறவர்கள் எல்லாம் என்னைப்பற்றி கேள்வி கேட்பார்கள். அவர்கள் முன்னாடி அப்பா அம்மா தலைகுனிந்து நிற்பார்கள். காவ்யா மட்டும் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் காலில் விழுந்தாவது கெஞ்சியிருக்கலாம்.

நான் எப்படி இருந்தவள்! எப்படி இருக்கவேண்டியவள்! ஆனால் இப்போது?? - அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மனம்விட்டு அழவேண்டும்போல் இருந்தது.

இவன் பேசி முடித்துவிட்டு அவளிடம் போனை கொடுக்க வந்தான்.

அழுகையை மறைத்துக்கொண்டு நார்மலாகப் பேசினாள். உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?

கேளு நிஷா

என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? ஐ மீன்... உங்க பியூச்சர் பத்தி...

பியூச்சர் இங்கதான்

இப்படி சொன்னா எப்படி... ஊருக்கு நல்லது பண்றதுக்கு பணமும் அவசியம்தானே... நீங்க அங்கேர்ந்தே guide பண்ணலாமே...

முதல்ல நீங்க இந்தளவு என்னை கேட்குற அளவுக்கு நான் தகுதியானவன் இல்லை நிஷா

உங்களை நீங்களே குறைச்சு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க

அய்யோ டீச்சர்... என்ன.. motivation class - ஆ?

ஏய்....

நிஷா அவனைப்பார்த்து லேசாகச் சிரித்தாள். கதிருக்கு மின்னல் அடித்ததுபோல் இருந்தது.

அதற்கு மேலும் அவனோடு நிற்கவேண்டாம் என்று, குட்நைட் சொல்லிவிட்டு மேலே போனாள்.

ஏய்....

நிஷா அவனைப்பார்த்து லேசாகச் சிரித்தாள். கதிருக்கு மின்னல் அடித்ததுபோல் இருந்தது.

அதற்கு மேலும் அவனோடு நிற்கவேண்டாம் என்று, குட்நைட் சொல்லிவிட்டு மேலே போனாள்.

அடுத்தடுத்த நாட்களில், நிஷாவை.. சோகமில்லாமல் சகஜமாக பேச, சிரிக்கவைக்க, அக்கறை காட்டினான். அவளோடு நெருங்கிப் பேசினான்.

நிஷாவோ, தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தாள். கதிர், தன் தங்கைக்குக் கணவனாக வரப்போகிறவன் என்பதால் கண்ணியமாக உடை உடுத்திக்கொண்டு நடந்தாள்.

அன்று - அவள் ஸ்கூலிலிருந்து வந்து ரூமுக்குள் நுழையும்போது அவள் ரூமுக்குள் ஒரு மூங்கில் ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. கூடவே சாய்ந்துகொள்ள புஸு புஸு என்று பில்லோஸ் வைக்கப்பட்டிருந்தன. அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. கீழே போகும்போது, பட்டும் படாமலும் அவனிடம் தேங்க்ஸ் சொன்னாள்.

இப்படித்தான் முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு தேங்க்ஸ் சொல்லுவாங்களா?

நிஷா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளால் போலியாகக்கூட சிரிக்க முடியவில்லை.

இந்த ஊர்ல எல்லார்க்கும் உன்ன பிடிச்சிருக்கு. உனக்குத்தான் உன்ன பிடிக்கல நிஷா. ஏன்?

நிஷா, பதில் பேச இயலாமல் தலை குனிந்து நின்றாள்.

உன்கிட்ட இருக்குற நல்ல குவாலிட்டிஸ் பார்த்து நான் வியந்துக்கிட்டே இருக்குறேன் நிஷா. I am impressed. I am really impressed.

நிஷாவின் மனதுக்குள், லேசாய் குளிர் காற்று வீசியது. சிறகுகள் அசைந்தன. அவனிடம் மனம் திறந்து பேசவேண்டும்போல் இருந்தது. அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள். கதிர், நான் ஹேப்பியா இருக்கணும்னுதான் நினைக்குறேன். ஆனா நான் எவ்ளோ ட்ரை பண்ணாலும்....

அவள் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றாள்.

ஜெயகாந்தனுடைய அக்கினிப் பிரவேசம் படிச்சிருக்கியா..?

ம்...படிச்சிருக்கேன் - நிஷாவின் உதடுகள் கொஞ்சமாய் பிரிந்து, பின் ஒட்டிக்கொண்டன. அதுவும் அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.

அப்புறம் ஏன் இன்னும் நீ கெட்டுப்போனதையே நினைச்சி வருத்தப்படுற?

ந.. நான்.. அந்தப் பொண்ணு மாதிரி... அப்பாவிப் பொண்ணு இல்லையே கதிர். இது தெரிஞ்சே பண்ண தப்பாச்சே.

மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது நிஷா. ஆனா எனக்கு.. நீ அந்தப் பொண்ணு மாதிரி... அப்பாவிப் பொண்ணுதான்.

செஞ்ச தப்பை நினைச்சி வருந்தி, அதுலேர்ந்து மீள நினைக்கிற அழகிய தமிழ் பொண்ணுதான்.

கதிர்...

You have the golden heart to make others happy . So you have all the rights to be happy. Nisha. இதுக்கும் மேல உன் இஷ்டம்.

அவன், சொல்லிவிட்டுப் போய்விட்டான். நிஷா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் மனதிலுள்ள பாரம் எல்லாம்... கொஞ்சம் கொஞ்சமாய்.. வெயில் பட்ட பனியாய் கரைந்துகொண்டிருந்தது. மனதுக்கு, இதமாகவும், லேசாகவும் இருந்தது. அந்த வீடு, அந்த ஊர், எல்லாமே மிகவும் பிடித்தது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், கிடைத்த இந்த compliment, அவள் மனதை மயிலிறகால் வருடிச்சென்றது.

அன்றிலிருந்து, நிஷா கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் சகஜமாக சிரித்துப் பேச ஆரம்பித்தாள். தன்னையறியாமல் அவனை admire பண்ணிக்கொண்டிருந்தாள்.

அன்று -

அத்தையே எல்லா வேலைகளையும் பாக்குறாங்களே நாமளும் ஹெல்ப் பண்ணுவோம் என்று... கிணற்றில் தண்ணீர் இறைத்தாள் நிஷா. இரண்டு பக்கெட் எடுத்ததும் மூச்சு வாங்கியது. முந்தானையை இழுத்து முகத்தைத் துடைத்தாள். ஓ மை காட்... இது இவ்வளவு கஷ்டமான வேலைன்னு நினைக்கலையே

அத்தை, வெளியே மாடுகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அங்கே வந்த கதிர், தத்தக்கா பித்தக்கா என்று தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான். என்ன இவ... கிணத்துக்குள்ள விழுந்திடுவா போலிருக்கே..!!

டீச்சர்... என்ன பண்றீங்க? என்றான்.

இவன் குரல் கேட்டதும் பதறிய நிஷா, கயிறை விட, வாளி பொத்தென்று தண்ணீரில் விழுந்தது.

உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?

நிஷாவுக்கு, அவன் தன்னை வா, போ என்று பேசுவது மிகவும் பிடித்திருந்தது. நெருக்கமாக, மனம் திறந்து பேசும்போது மட்டும் அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை அவள் கவனித்தாள்.

இல்ல... நான் பழகணும்... என்றாள்.

அது சரி.... என்றவன், கயிறை இழுத்து அவள் கையில் கொடுத்தான். இழுங்க.. என்றான். ரொம்ப குனியாதீங்க.. என்றான்.

ம்...

அந்த வாளி கனமாக இருந்ததோ என்னவோ, பாதியிலேயே நின்றது. இடுப்பு வலித்தது. நேராக நிற்க முடியவில்லை. ரொம்பவும் குனிந்து இழுக்கவேண்டியதாயிருந்தது.

ரொம்ப குனியாதீங்க. கிணத்துக்குள்ள விழுந்துடுவீங்க.. என்று சிரித்தான்.

கிண்டல் பண்ணாதீங்க.... - அவள் நாணத்தோடு சொன்னாள். உண்மையில் அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு சாதாரண வேலையைக்கூட செய்யத்தெரியாமல் இருக்கிறோம்

கதிர் அவளுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு அவளோடு சேர்த்து கயிறைப் பிடித்தான். அவளைப் பின்னாலிருந்து அனைத்துப் பிடித்தமாதிரி... ஆனால் அவளை உரசாமல், கயிறை மேலே இழுத்தான். நிஷாவுக்கு ஒருமாதிரியாக இருந்தது. முதுகு கூசியது. ஒருவித சிலிர்ப்பாக இருந்தது. வாளி, தண்ணீரோடு மேலே வந்தது. இப்போது சுலபமாக இருந்தது.

இப்படி இறைக்கணும். ஓரளவுக்குத்தான் குனியனும். ரொம்ப குணியக்கூடாது.

ம்...

இப்போது அவன் அவளுக்கு பக்கத்தில் நின்றுகொள்ள, அவள் வாளியை உள்ளே போட்டாள். உள்ளே போட்டபிறகுதான் யோசித்தாள், ஐயோ இடுப்பு.... !

அவள் புடவையை நன்றாக ஏத்தித்தான் கட்டியிருந்தாள். ஆனாலும் அவள் தண்ணீர் வாளியோடு போராடிக்கொண்டிருந்ததில், புடவை லோ ஹிப் அளவுக்கு இறங்கியிருந்தது. அவளது அழகான தொப்புள் குழி மூடப்பட்டுதான் இருந்தது. இருந்தாலும் இடுப்பு தெரியுமே... என்று தவித்தாள்.

கதிர், இதை எதிர்பார்க்கவில்லை. அவளது இடுப்பழகை.... ரசித்துப் பார்த்தான். அவனையுமறியாமல்.. அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு. ஒருவிதமான சுகம்.

அவளுக்கே தெரியாமல் புடவை இறங்கியிருக்கிறது என்று, அவளுக்கு வலதுபக்கம் வந்து நின்றுகொண்டான்.

நிஷாவுக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவித சந்தோஷமாகவும் இருந்தது. அவன் சொல்லிக்கொடுத்தபடி, கைகளில் பலம் கொடுத்து வாளியை மேலே இழுத்தாள். இருந்தாலும் அவளுக்கு குனியாமல் இருக்கமுடியவில்லை. கதிர் அவளது பின்னழகுகளை ரசித்துப் பார்த்தான். மறுபடியும் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. சிற்பிகள் வடிக்குற சிலை மாதிரி... நம்ம நிஷா ஒரு விதமான அழகுதான்!

கதிர் பார்த்துக்கொண்டிருக்க, நிஷா இரண்டு வாளி இறைத்திருப்பாள். ஐயோ ஐயோ என்று அடித்துக்கொண்டு லக்ஷ்மி ஓடிவந்தாள்.

நீ எதுக்கும்மா இந்த வேலையெல்லாம் செய்யுற?

வந்ததும் வராததுமாய் நிஷாவின் கைகளை விரித்துப் பார்த்தாள். உள்ளங்கைகள் நன்றாக சிவந்திருந்தது. ரத்தம் கட்டிப்போயிருந்தது. முரட்டுக் கயிறு... ஆங்காங்கே கீறி விட்டிருந்தது. கதிர் அதிர்ந்தான்.

ஏண்டா அறிவு கெட்டவனே நிஷாவை தண்ணி இறைக்கவெச்சி பார்த்துட்டு இருக்கியே

ந...நான் வர்றதுக்கு முன்னாடியே நிஷா இறைச்சிட்டு இருந்தாங்க...