உங்களில் ஒருத்தி 11

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

பொய் சொல்லாத. உனக்கு அவளைக் கண்டாலே ஆகமாட்டேங்குது

நான் இறைக்க சொல்லல.... நிஷா சொல்லு நிஷா

அவள் சொல்லவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரித்தாள்.

கதிர் நன்றாக திட்டு வாங்கினான். அவன், அடிப்பாவி....! என்று நிஷாவைப் பார்த்தான்.

இரவில் - அவள் கைக்கு மருந்து போட்டு விட்டிருந்தாள் லக்ஷ்மி. முற்றத்தில்.. நார் கட்டிலில் அமர்ந்துகொண்டு, சிலு சிலு காற்றை ரசித்துக்கொண்டு, மருதாணி வைத்த கையை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு இருந்தாள் நிஷா. அவளைக் கடந்துபோன கதிர், ஒரு ஸ்டெப் பின்னால் வந்தான். அவளைப் பார்த்தான்.

நானேதான் ஆசைப்பட்டு தண்ணி இறைச்சேன்னு அம்மாகிட்ட சொல்லியிருக்கலாம்ல? என்றான். முகத்தில் கடுப்பு தெரிந்தது.

சொல்லியிருந்தா நீங்க திட்டு வாங்கியிருக்க மாட்டீங்களே....

உன்ன...! என்று அவள் தலையில் தட்ட வந்தான். நிஷா தலையை சாய்த்துக்கொண்டு, ஒரு ஷோல்டரை மட்டும் தூக்கிக்கொண்டு, சிரித்தாள்.

மனம்விட்டுச் சிரித்தாள். பேரழகியாக இருந்தாள்.

அப்போது அவளுக்கு போன் வர, கதிர் ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தான். பத்மா அத்தை.. என்று சொல்லிக்கொண்டே போனை அட்டன் பண்ணி அவள் காதில் வைத்தான்.

வேணாம் கதிர்... நான் அடஜஸ்ட் பண்ணிக்கறேன்... - அவள் அவனிடமிருந்து போனை வாங்கி காதில் வைக்க...போன் நழுவி அவள் மடியில் விழுந்தது. கதிர், அவள் மடியில் கிடந்த போனை, எடுத்தான். இருவருக்குமே... ஒருவிதமாக.. சுகமாக இருந்தது. எடுத்ததும், போனை அவள் காதில் வைத்து பிடித்தான்.

சும்மா பேசுங்க

நிஷா, கொஞ்சம் தயக்கத்தோடு, பின் சகஜமாக அவன் முன்னால் தன் அம்மாவிடம் பேச ஆரம்பித்தாள்.

கதிர், அவள் பேசும் அழகையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் உதட்டசைவுகளை.... சிணுங்கல்களை, நக்கலை, அக்கறையை, பாசத்தை, விதம் விதமான முக பாவனைகளை.... கண்ணிமைக்காமல் ரசித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

நிஷா...நீதான் எவ்வளவு அழகு!... என்று நினைத்து மகிழ்ந்தான். இந்த நிஷாவைத்தான் நான் விரும்பினேன். இந்த அழகில்தான் நான் கிறங்கினேன். நீ எனக்காக உன் அம்மாவை எதிர்த்துப் பேசினாயே... அந்த அக்கறையில்தான் நான் உனக்கு அடிமையானேன். அன்று திருமண வீட்டில் என்னைக் கூட்டிக்கொண்டு போய் இவர்தான் கதிர் இவர்தான் கதிர் என்று அறிமுகப்படுத்திய இந்த நிஷாவைத்தான் நான் பார்க்க விரும்பினேன். என் பெயர் இவ்வளவு இனிமையானது என்பதே எனக்கு அன்றைக்குத்தானே தெரியும்.

நீ கெட்டுப்போய்விட்டாய் என்று யார் சொன்னது? நீ எப்பொழுதும் உயர்வான இடத்தில்தான் நிஷா.

அந்த இரவு முழுக்க... அவள் முக பாவனைகள் திரும்பத் திரும்ப கற்பனையில் வர, அதை இழக்க மனமில்லாமல்... தூங்காமல் கிடந்தான். நடு இரவுக்குப் பிறகுதான், அவன் அவனையுமறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான்.

அடுத்து வந்த நாட்களில் -

நிஷாவின்மேல் கதிருக்கும், கதிர் மேல் நிஷாவுக்கும், அன்பும் பாசமும் ஈர்ப்பும் வந்திருந்தது. அங்குள்ள விவசாயிகளுக்கு வழிகாட்டியாக அவன் செய்யும் விஷயங்களைப் பார்த்து நிஷா அவனை வியந்து பார்த்தாள்.

நாளெல்லாம் ஸ்கூல், ட்யூசன் என்று இருக்கும் அவளுக்கு, கதிரோடு பேசும் கொஞ்ச நேரங்கள், மனதுக்கு இதமாகவும் சந்தோஷமாகவும் இருந்தன. ஸ்கூலில் இருக்கும்போதுகூட, கதிரின் நினைவுகள் வந்தன. எப்போதுடா போய் அவனோடு பேசிக்கொண்டிருப்போம் என்று தோன்றும்.

ஆனால் அவன் தன் தங்கைக்கு கணவனாக வரப்போகிறவன்... அவன் அவளது சொத்து... என்று நினைக்கும்போது, அவளுக்குள் எழும் ஒரு சிலிர்ப்பான சுகமான உணர்வு.. அடங்கிப்போய்விடும்.

அன்று -

நிஷாவுக்கு விடுமுறை நாள். மதிய சாப்பாடுக்கு லட்சுமி அத்தை ஆட்டுக் கறிக்குழம்பு வைக்க, வீடே மணந்தது.

கதிருக்குப் பிடிக்கும்னு வச்சேன்.. என்றாள்.

அப்போ கதிர் வரட்டுமே... சேர்ந்து சாப்பிடலாம்.. என்றாள் நிஷா.

அவன் எங்கம்மா இப்போ வரது? மூணு மணி ஆகும்.

அப்போ நான் போய் கொடுத்துட்டு வர்றேன்

உனக்கெதுக்கும்மா சிரமம். இந்த வெயில்ல

எனக்கு ஒரு சிரமமும் இல்ல. வயல்வெளில நடக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்

அவள் வேக வேகமாக ஒரு செருப்பை மாட்டிக்கொண்டு நடக்க... லக்ஷ்மி, நிஷா கதிர் மேல் வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். நிஷாவையே ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வயலில்.. வரப்பில்... நிஷா தூரத்தில் நடந்து வரும்போதே கதிர் பார்த்துவிட்டான். அங்கேயே நில்லு... நான் அங்க வர்றேன்... என்று கை காட்டினான்.

அவளோ இது புரியாமல், ஒருகையில் சாப்பாடு கூடையைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் தொடைகளுக்கு நடுவே கைவைத்து புடவையை லேசாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, அழகாக வந்துகொண்டிருந்தாள்.

டீச்சருக்கு உங்க மேல ரொம்ப பிரியமோ... என்று, ஊருக்குள், ஒரு சுட்டிப்பயல் கதிரிடம் கேட்டிருந்தான். அது அவனது நினைவுக்கு வந்தது.

வேடிக்கை பார்த்துக்கொண்டு, இயற்கையை ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்த நிஷா, எதிர்பாராவிதமாக அவள் கால் வைத்த இடத்தில் களிமண் சரிய... தடுமாறி வயலுக்குள் தண்ணீருக்குள் கால் வைத்துவிட்டாள். தண்ணீருக்குள்... சகதிக்குள் கால் நுழைய... செருப்பில் சகதி வழுக்க... இன்னும் தடுமாறி அடுத்த காலையும் வயலுக்குள் சகதிக்குள் நுழைத்துக்கொண்டு கீழே விழுந்துவிடுவதுபோல் தடுமாற, கதிர் ஓடிவந்தான்.

நிஷாவுக்கு கொலுசு வரைக்கும் சகதி அப்பிக்கொண்டது. புடவை நுனி, கலங்கிய தண்ணீரில் நனைந்துவிட்டது.

ஐயோ இது என்ன சோதனை..... என்று அழகாக உதட்டைச் சுழித்த நிஷா, கூடையை வரப்பில் வைத்துவிட்டு, காலைத் தூக்க முயல, செருப்பு சதி செய்தது. சகதியில் மாட்டிக்கொண்டு வெளியே வர மறுத்தது.

நான்தான் வர்றேன்னு சொன்னேன்ல? என்று திட்டிக்கொண்டே வந்த கதிர் கையை நீட்ட, நிஷா அவன் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக மேலே எறிவந்தாள். அப்படியும் தடுமாறினாள். அவனைப் பிடித்துக்கொண்டாள்.

ஸாரி கதிர். அத்தை உங்களுக்கு இந்த குழம்பு பிடிக்கும்னு சொன்னாங்க

அதுக்காக இந்த வெயில்ல வந்தியா? என்ன நிஷா நீ...

நிஷா காலெல்லாம் சகதியாக நின்றாள். ப்ச்.... என்று தன்னையே நொந்துகொண்டாள். செருப்பை கழட்டிவிட்டும் நடக்க முடியாது. காய்ந்த களிமண் வரப்பு... ஒழுங்கில்லாமல் இருக்கிறது. காலில் குத்தும்.

இவளுக்கு நடக்கக்கூட தெரியாதா என்று கதிர் தன்னைப்பற்றி நினைப்பானோ என்று... அவள் செய்வதறியாமல் தவிக்க, கதிர் அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டான்.

ஏய்....

நீ ரொம்ப வெயிட்டா இருப்பியோன்னு நெனச்சேன். பரவால்ல. லேசாத்தான் இருக்கே

நிஷாவுக்கு நாணமாக இருந்தது. பொசுக்குன்னு பிடிச்சி தூக்கிட்டான்!. வெட்கத்தோடு அவன் கையில் கிடந்தாள். அவன் தோள்களை பிடித்துக்கொண்டாள்.

பார்த்து கதிர்... மெதுவா...

நான் உன்ன தூக்கிட்டு சகதிக்குள்ளேயே நடப்பேன். வரப்புல நடக்க மாட்டேனா

ம்க்கும். ரொம்பத்தான்...

அவளுக்கு, அவன் கையில் கிடப்பது சுகமாக இருந்தது. கதிரோடு இருக்கும், அவனோடு பேசும் நேரங்கள்தான் இன்றைய நாட்களில் அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது.

அவனது இடது கை, அவளது இடது அக்குளுக்குள் இருக்க, அவளை.. அது என்னவோ செய்தது. தவிப்பாக இருந்தது.

கதிர், அவளை பொன்னே பூவே என்று, பம்ப் செட் பக்கத்தில் இறக்கிவிட்டான். அவள், புடவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, தன் கால்களை தண்ணீரில் காட்டும் அழகை ரசித்தான்.

அவளது கொலுசும், கரண்டைக்கால் அழகும், அவனைப் பைத்தியமாக்கின. ப்பா... அழகோ அழகு

கதிர்... சகதி போகவே மாட்டேங்குது... அவள் சலிப்பாக சொல்லிக்கொண்டே காலை பாயும் தண்ணீரில் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டிருந்தாள். கதிர், அவளை தொட்டியின் விளிம்பில் உட்காரச் சொல்ல.... அவள், புடவையை முட்டிவரை உயர்த்திப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தாள். கால்களைத் தொங்கப்போட்டாள்.

கதிர், சட்டென்று கீழே உட்கார்ந்து அவள் வலது காலை தூக்கிப் பிடித்து கழுவ ஆரம்பித்தான். நிஷா பதறினாள்.

கதிர்... என்ன பண்ற...!!!

தேய்ச்சு கழுவி விட்டாத்தான் போகும் நிஷா....

ந.. நானே கழுவிக்கறேன்....

பரவால்ல நிஷா

அவன் அவளது இரண்டு கால்களையும் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கழுவ, நிஷாவின் பெண்மை மலர அதுவே போதுமானதாயிருந்தது. மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க.... தலையை குனிந்துகொண்டு, அவனைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

தங்கைக்கு கணவனாய் வரப்போறவனை... இப்படி ரசிப்பது தப்பல்லவா... என்று பார்வையை மாற்றினாள்.

போதும் கதிர்.. என்று கால்களை இழுத்துக்கொண்டாள்.

அவளது, தயக்கம், அவளது படபடப்பு, அவளது தவிப்பு, அவளது பார்வை... கதிரை என்னவோ செய்தது. அவள் கால்களைத் தொட்டதால் மனது கிடந்தது குதித்தது.

ஈரக் காலில் மண் படக்கூடாது என்பதால் அவளைத் தூக்கிக்கொண்டு, மரத்தடி நிழலில் கொண்டு போய் இறக்கி விட்டான்.

இப்போல்லாம் பொசுக் பொசுக்குன்னு தூக்கி வச்சிக்கிடுறான்!

நீ சாப்ட்டியா?

ம்ஹூம்...

சரி உனக்கும் கொண்டுவந்திருக்கியா?

ஆமா கொண்டு வந்திருக்கேன்

கதிர் சிரித்துக்கொண்டே முகத்தைத் துடைத்தான். அவள் பொறுப்பாக பாக்ஸ்களை பிரித்து வைத்தாள். கதிர் அவளையே ரசித்துப் பார்த்தான்.

என்ன பாக்குறீங்க. சாப்பிடுங்க

நீயும் சாப்பிடு.. என்று சொல்லிவிட்டு அவன் வேகம் வேகமாக சாப்பிட்டான்.

இவ்ளோ பசியை வச்சிக்கிட்டு ஏன் லேட்டா மூணு மணி, நாலு மணின்னு சாப்பிடுறீங்க?

அவனிடம் பதில் இல்லை. வேலையில் இறங்கிவிட்டால் நேரம் போவதே தெரிவதில்லை.

இனிமே ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடணும் சரியா?

சரி நிஷா

அவள் கண்டிப்போடு சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது. இப்படி வயல்வெளியில் உட்கார்ந்து சாப்பிடுவது, அவளுக்கு இதமாக இருந்தது.

மட்டன் எலும்பை அவள் பட்டும் படாமலும் சூப்பிவிட்டு வைக்க... கதிர் பதறினான்.

நல்லா உறிஞ்சிட்டு போடு நிஷா. இதுக்கு முன்னாடி நான் கொண்டு வந்து கொடுத்த கறியை எல்லாம் சமைச்சீங்களா இல்ல தூரப்போட்டீங்களா

நான் நல்லா உறிஞ்சித்தான் போட்டிருக்கேன்

எங்க உறிஞ்ச... சாறெல்லாம் அப்படியே இருக்கு. இங்க பாரு... என்று தான் போட்டிருந்த எலும்புகளைக் காட்டினான். அவை பல நாட்கள் வெயிலில் காயவைத்திருந்தது போல் வறண்டுபோய் இருந்தன. அவளுக்கு மயக்கமே வந்தது.

அடப்பாவி...! ராஜ்கிரண் குரூப்பா நீங்கள்லாம்?.. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். கண்களை விரித்தாள்.

கதிர் அவள் சூப்பிவிட்டுப் போட்ட எலும்பை எடுத்தான். உறிஞ்சினான். சுவைத்தான்.

இப்படி உறிஞ்சனும்...! என்றான்.

நிஷாவுக்கு கிறக்கமாக இருந்தது. நான் வாய் வச்சி போட்டதை பொசுக்குன்னு எடுத்து அவன் வாய்ல வச்சிட்டான். ஐயோ எனக்கு ஏன் ஒரு மாதிரியா ஆகுது!.

அவள் அடுத்த எலும்பை சூப்பிவிட்டு தயக்கத்தோடு வைக்க, அவன் அதையும் எடுத்து உறிஞ்சினான். ஆஹோ ஓஹோ என்றான். செம டேஸ்ட் நிஷா என்றான். அவளுக்கு உடம்பெல்லாம்... சூடாக ரத்தம் பாய்ந்தது சுகமாக இருந்தது

அடுத்த எலும்பு, அவள் கையிலிருந்து, நேராக அவன் கைக்குப் போனது. நிஷா தலையை குனிந்துகொண்டாள்.

நீங்க தீபாவை கட்டிக்கப் போறவர். அது ஞாபகம் இருக்கட்டும்! என்றாள்.

நான் இன்னும் கமிட் பண்ணலையே. அதுனால அது கன்பார்ம் கிடையாது... என்றான். அவளைத் தூக்கிக்கொண்டு போய் தண்ணீர் தொட்டியில் உட்கார வைத்தான்.

கைய நீயே கழுவிக்கறியா நான் கழுவி விடட்டுமா

நானே கழுவிக்கறேன்

அவள் கையை தண்ணீரில் காட்டப்போக, அவன் பிடித்துக்கொண்டான். அவள் விரல்களிலிருந்த பருக்கைகளைப் பார்த்தான்.

அரிசி விளைவிக்க நாங்க எவ்வளவு கஷ்டப்படுறோம். நீ என்னடான்னா வேஸ்ட் பண்ற

சொல்லிக்கொண்டே அவள் விரல்களை.. ஒவ்வொன்றாக வாய்க்குள் நுழைத்துக்கொண்டு சூப்ப, நிஷா நிஷாவாக இல்லை. பெண்மை மலர்ந்துகொண்டு.. அவளுக்கு பலவிதமான சுகமாக இருந்தது.

விடுங்க... என்றாள் கசங்கிய முகத்தோடு. இப்போது அவளது ஆள் காட்டி விரலும் நடு விரலும் அவன் வாய்க்குள் இருந்தது. அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

இதையெல்லாம் தீபாவுக்கு பண்ணிவிடுங்க... - அவள் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

நான் என் நிஷாவுக்குத்தான் இதையெல்லாம் பண்ணுவேன். வேற யாருக்கும் பண்ணமாட்டேன்.

அவள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு கையை கழுவினாள். எண்ணங்கள் பலவாறாக ஓடின. ஐயோ என்ன நடக்குது இங்கே. வீட்டுல என்ன நினைப்பாங்க..

அவன் அவளைத் தூக்கிக்கொண்டான். அவள் மறுப்பு சொல்லாமல் அவன் கையில் கிடந்தாள். அவளுக்கு இது தேவையாயிருந்தது. உண்மையான அன்பு... அரவணைப்புக்காக அவள் ஏங்கிப்போய் இருந்தாள். கண்களில் கண்ணீர் முட்டியது. அவன் கழுத்தில் முகம் புதைத்து அழவேண்டும்போல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டாள்.

இனிமே இப்படி வெயில்ல வராதே. நீ கறுத்துப் போயிடுவ! என்றான்.

கதிர்... என்னால புரிஞ்சிக்கவே முடியல. ஆக்சுவலி... தீபா......

அவன் நச்சென்று அவள் உதட்டில் ஒரு முத்தமிட்டான். நிஷாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. கண்கள் குளமாயின.

கதிர் அவளை கீழே இறக்கிவிட்டான். அவள் தலைகுனிந்து நின்றாள். பின் மெல்ல வாய் திறந்து, தழுதழுக்கும் குரலில் சொன்னாள்.

தீபா.. உன்ன லவ்....

கதிர் அவளது இடுப்பை இருபுறமும் பிடித்து இழுத்து அவளது உதடுகளில் அழுத்தமாய் இன்னொரு முத்தமிட்டான். நிஷா படபடப்போடு உதடுகளை விடுவித்துக்கொண்டு இமைகளை தாழ்த்திக்கொண்டாள். மூச்சு வாங்கினாள். அவன் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

நான் உன்னத்தாண்டி கல்யாணம் பண்ணிக்கப் போறேன்

நிஷா கண்ணீரோடு அவன் நெஞ்சில் புதைந்துகொண்டாள். அழுதாள். அடுத்த நிமிடமே அவனிடமிருந்து விலகினாள்.

ஐ லவ் யூ நிஷா

அவள் பதில் பேசாமல் வேகம் வேகமாக நடந்தாள்.

நிஷா.. நில்லு.. ஏய்...

அவன் அவள் பின்னாலேயே வந்தான். அவள் வளையல் கை பிடித்து நிறுத்தினான்.

நிஷா...

வேணாம் கதிர். உனக்கு நான் ஒர்த் கிடையாது. நீ தீபாவையே கட்டிக்கோ

எனக்கு உன்னைத்தாண்டி பிடிச்சிருக்கு... - அவன் கத்தினான்.

நான் கெட்டுப்போனவ. நான் ஒரு அசிங்கம்

அவள், முழங்காலை மடக்கி உட்கார்ந்துகொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவள் அழுது தீர்க்கட்டும் என்று அவன் தடுக்காமல் நின்றான். அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான்.

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு, மூக்கை உறிஞ்சிக்கொண்டு நிஷா தள்ளாடி எழுந்து நின்றாள். விம்மிக்கொண்டு நின்றாள்.

But நீ என் பொண்டாட்டி. இந்த நிமிஷத்திலிருந்து நீ என் பொண்டாட்டி.

உறுதியாகச் சொல்லிவிட்டு, அவன் திரும்பி நடந்தான். வயலுக்குள் இறங்கி வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

நிஷா அவனைக் காதலோடும் அழுகையோடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டே.... அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு, மூக்கை உறிஞ்சிக்கொண்டு நிஷா தள்ளாடி எழுந்து நின்றாள். விம்மிக்கொண்டு நின்றாள்.

But நீ என் பொண்டாட்டி. இந்த நிமிஷத்திலிருந்து நீ என் பொண்டாட்டி.

உறுதியாகச் சொல்லிவிட்டு, அவன் திரும்பி நடந்தான். வயலுக்குள் இறங்கி வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

நிஷா அவனைக் காதலோடும் அழுகையோடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டே.... அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

அவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. வெடுக் வெடுக்கென்று நடந்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.

வியர்த்து விறுவிறுத்து வந்து நின்ன அவளைப்பார்த்து லக்ஷ்மி பதறினாள். ஏம்மா கண்ணு கலங்கியிருக்கு?? கதிர் எதுவும் திட்டுனானா? சாப்பாட்டு கூடையை எங்கே? சாப்பிட்டீங்களா இல்லையா?

நிஷா முகத்தைக் கழுவினாள். சாப்பிட்டோம்... என்று மட்டும் மெதுவாக சொல்லிவிட்டு, மேலே போய்விட்டாள். போய் பெட்டில் விழுந்தாள்.

கதிர் தன்னிடம் propose பண்ணியதை நினைத்து... உள்ளுக்குள்... திடீர் சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் அந்த சந்தோஷத்தைக் கொண்டாட... ஏனோ அவளுக்கு தயக்கமாக இருந்தது. எண்ணங்கள் பலவிதமாக சிதறி ஓடின.

கதிர்... நான் இந்த ஊருக்கு வரும்போது நீ என்மேல இவ்ளோ பாசத்தை கொட்டப்போற..ன்னு எனக்கு தெரியாதே கதிர். நான் சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சி நீ எப்போ என்கிட்டே வந்து மனம்விட்டு பேசினாயோ... என்னப்பத்தி முழுசா தெரிஞ்சும் எப்போ என்ன மதிச்சு பேசினாயோ, கவலைப்படாம இரு நிஷான்னு எப்போ எனக்கு ஆறுதல் சொன்னாயோ அப்போவே நான் உன்ன என் மணதளவுல ரசிக்க ஆரம்பிச்சிட்டேன் கதிர்.

ஆனா நீ தீபாவ கட்டிக்கிடப்போறவன்... அப்புறம் நமக்கு என்ன தகுதி இருக்கு... இப்படிலாம் நெனைச்சித்தான் மனசை அலைபாயவிடாம அமைதியா இருந்தேன். ஆனா...இன்னைக்கு நீ என்ன ஆசையா தூக்கிக்கிட்டதும், சத்தியமா எனக்கு கீழ இறங்க மனசே இல்ல கதிர். நீ ஒன்னு ஒண்ணா பண்ணும்போது நீ என்மேல வச்சிருக்கிற ஆசையை பார்த்து எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா... எனக்கு இது போதும் கதிர். இது போதும். கொஞ்ச நேரம் என்ன உன் கைல பூ மாதிரி தூக்கி வச்சிக்கிட்டு காதலோட என்ன பார்த்தியே... அந்தப் பார்வை ஒண்ணே போதும் கதிர்.

இந்த சந்தோஷமே எனக்குப் போதும்.

தீபா... அங்க உன்மேல எவ்வளவு ஆசையாயிருக்கா தெரியுமா.... ஒரு அக்காவா இருந்துட்டு அவ வாழ்க்கையை நான் பறிக்கலாமா? அவ பாவம் கதிர். அவ... கைபடாத ரோஜாவா அங்க உனக்காக காத்துக்கிட்டிருக்கா. நீ... இங்க நல்ல மரியாதையோட வாழ்ந்துட்டு இருக்குற. இப்படியிருக்கும்போது, சீனுகிட்ட பல தடவை சோரம் போயிட்ட தரம்கெட்ட பொண்ணு, நான் எதுக்கு கதிர். நான் உனக்கேத்தவளா எப்படி ஆக முடியும்.

ஸாரிடா கதிர். நீ என் இருண்ட வாழ்க்கைல வந்த வெளிச்சம். கெட்டுப்போன எல்லாப் பொண்ணுங்களுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை... ஒரு அதிர்ஷ்டத்தை நீ எனக்குக் கொடுக்குற. அப்படியிருந்தும் நான் உன்ன மிஸ் பன்றேன்னா.. மிஸ் பன்றேன்னா...

நிஷாவால் அதற்குமேல் யோசிக்க முடியவில்லை. மனது கனத்தது.

அவன் தொங்கவிட்டிருந்த ஊஞ்சலைப் பார்த்தாள். அவன் சூப்பிய விரல்களை பார்த்துக்கொண்டே சோகமாகக் கிடந்தாள். கதிர் கொடுத்த முத்தம்... மீண்டும் மீண்டும் உதட்டை நனைத்தது. தேனாய் இனித்தது. அவன் சொல்லியதெல்லாம் ஒன்று ஒன்றாக ஞாபகம் வந்தது.

இந்த ஊர்ல எல்லார்க்கும் உன்ன பிடிச்சிருக்கு. உனக்குத்தான் உன்ன பிடிக்கல நிஷா. ஏன்?

உன்கிட்ட இருக்குற நல்ல குவாலிட்டிஸ் பார்த்து நான் வியந்துக்கிட்டே இருக்குறேன் நிஷா. I am impressed. I am really impressed.

அப்புறம் ஏன் இன்னும் நீ கெட்டுப்போனதையே நினைச்சி வருத்தப்படுற?

You have the golden heart to make others happy . So you have all the rights to be happy. Nisha. இதுக்கும் மேல உன் இஷ்டம்.

நிஷா, அந்த மதிப்பு மிக்க பாராட்டுக்களைக் கொண்டாட முடியாமல் அழுதுகொண்டு கிடந்தாள்.

சீனுவின் மீதிருந்த காதல், அவனோடு சந்தோஷமாக இருந்த நிமிடங்கள் எல்லாம் ஒன்று ஒன்றாக ஞாபகம் வர, இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, தான் கதிரோடு வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று நினைத்தாள்.

நான் எல்லாத்தையும் மறந்து, இங்கே ஸ்கூல், குழந்தைகள், ஸ்டூடண்ட்ஸ் என்று ஒரு புது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாம்னுதானே வந்தேன். நீ இப்படி propose பண்ணுவேன்னு நினைக்கவே இல்லையேடா

எனக்கு உன்னைத்தாண்டி பிடிச்சிருக்கு...

நீ என் பொண்டாட்டி. இந்த நிமிஷத்திலிருந்து நீ என் பொண்டாட்டி.

நிஷாவின் காதில் அந்த வார்த்தைகள் எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

சென்னையில்.. ஷாப்பிங்க் மாலில்... அவன் தன்னைக் காப்பாற்றியது... நம்ம நிஷா என்று சொல்லி பதறியது..... இங்கே முதல் நாள், பைக்கில் கூட்டிப்போய் ஸ்கூலில் டிராப் பண்ணியது.... இன்று வயலில் தன் காலைத் தொட்டு க்ளீன் பண்ணியது.... சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு விரல்களை உண்டு இல்லை என்று பண்ணியது... காதலோடு தூக்கி தூக்கி வைத்துக்கொண்டது.... தாங்கு தாங்கு என்று தாங்கியது......

நிஷா, ஊஞ்சலையே பார்த்துக்கொண்டு, எந்த முடிவும் எடுக்க முடியாமல் கிடந்தாள்.

சாயங்காலமானது. இரவும் ஆனது. அவள் கீழே போகவே இல்லை. அத்தை மேலே வந்தாள். என்னம்மா உடம்பு எதுவும் சரியில்லையா என்று பதறினாள். சாப்பாடை ரூமுக்கு எடுத்துட்டு வரவா? என்று பாசமாகக் கேட்டாள்.

நீங்க கஷ்டப்படவேணாம் அத்தை. நான் கீழே வர்றேன்....

கதிரின் முகத்தைப் பார்க்காமலே சாப்பிட்டு முடித்தாள். சாப்பிட்டு முடித்துவிட்டு கையை அவள் தன் முந்தானையில் துடைக்கப்போக, கதிர் தன் டவலை கொடுத்தான்.

நிஷா நான் உன்கிட்ட பேசணும்.

அவள் பதில் பேசாமல் படியேற, அவள் கைபிடித்து நிறுத்தினான்.

ப்ளீஸ் நிஷா....

லட்சுமி தூங்கப்போயிருந்தாள். நிஷா, அவனை ஏறிட்டுப் பார்க்காமல்... படியில் உட்கார்ந்தாள். கதிர் அவளுக்கு கீழே உள்ள படியில் உட்கார்ந்துகொண்டு... பின்பக்கமாக லேசாக சாய்ந்துகொண்டு அவளைப் பார்த்தான்.

ஸாரி நிஷா உன்கிட்ட இப்படி சட்டுனு நான் சொல்லியிருக்கக்கூடாது. அப்படி நடந்திருக்கக் கூடாது. எனக்கு.. மனசுல வச்சிட்டே இருக்கத்தெரியல. சீக்கிரம் ஒரு முடிவு தெரியணும்னு அவசரப்பட்டுட்டேன். இப்போ நிதானமா கேட்குறேன். என்ன உனக்குப் பிடிச்சிருக்கா நிஷா?

நிஷா மெதுவாக உதடுகள் பிரித்துச் சொன்னாள். உங்களுக்கு என்னைவிட நல்ல பொண்ணு கிடைப்பா கதிர். அது தீபாவா இருக்கலாம் அல்லது வேறு யார் வேணும்னாலும் இருக்கலாம். பட் definitely நான் இல்ல. அதோட... நம்பி என்னை இங்க அனுப்பி வச்சிருக்கிற அப்பா அம்மாவுக்கு இன்னொரு கஷ்டத்தை கொடுக்க நான் விரும்பல.

கதிர் எழுந்து உட்கார்ந்தான். நிஷா, நீ யாரையும் நினைச்சி குழப்பிக்கவேண்டாம். தீபாவை... நான் பார்த்துக்கிடுறேன். மச்சானையும் மாமாவையும் அத்தையையும்.. நான் பார்த்துக்கிடுறேன். nobody will misunderstand you. I will take care. நான் சொல்றது புரியுதா?

நிஷா பதில் பேசாமல் இருந்தாள். (உனக்கு என்மேல் இவ்வளவு காதல் எப்போது... எப்படி வந்தது கதிர்?)

உன் மனசுல நான் இருக்கேன்னு நீ நெனைச்சா.... உன்ன நான் நல்லா பார்த்துப்பேன்னு நீ நம்பினா.. ஒரே ஒரு வார்த்தை சொல்லு நிஷா. உன்ன ராணி மாதிரி வச்சி நான் பார்த்துக்கிடுறேன். நீ எந்த உறவும் இல்லாம இப்படி வருத்தத்தோட நிக்குறேன்னு தெரிஞ்சிருந்தா நான் தீபாவுக்கு ஓகே சொல்லியிருக்கவே மாட்டேன். பல வருஷங்களுக்கு முன்னாடி... நான் உன்ன மிஸ் பண்ணேன். இப்போ மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு முடிவோட இருக்கேன்

நிஷாவுக்கு, கதிருக்கு தன்மேல் உள்ள காதலை நினைத்து சிலிர்ப்பாக இருந்தது. ஆனால், ஆசையோடு இருந்த சீனுவைப்பற்றி யோசிக்காமல்..... அவன் திருந்துவதற்காகக் காத்திருக்காமல், இப்படி தனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது என்று கதிரை ஏற்றுக்கொண்டால்.. இது சந்தர்ப்பவாதம் அல்லவா என்று தோன்றியது.

ஒன்று சீனுவை திருத்தி அவனோடு சேர்ந்து வாழவேண்டும். திருந்திவிட்டால், அவன் என்னை எப்படியும் சந்தோஷமாகத்தான் வைத்திருப்பான்! இதில் இன்னொரு நன்மை, கதிரை அடையவேண்டும் என்ற தீபாவின் ஆசையும் நிறைவேறும்.

அவள் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாள்.

கதிர் எழுந்து நின்றான். அவள் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டான்.

உன்ன நான் கம்பெல் பண்ணல நிஷா. எனக்குத் தேவை உன்னோட சம்மதமும், பழசையெல்லாம் முழுசா மறந்துட்டு உங்ககூட சந்தோஷமா வாழ்வேன் கதிர்.. என்கிற உன் உறுதியான முடிவும்தான். நீ நல்லா யோசிச்சு சொல்லு. take your own time. நான் காத்திருக்கேன் சரியா?

ம்...

சரி. நேரமாகுது. போய் படு.

நிஷா யோசனையோடு எழுந்து நின்றாள். கதிர் அவளைத் தூக்கிக்கொண்டான். நிஷா எச்சில் விழுங்கினாள். விடுங்க கதிர் நான் நடந்து போறேன்.. என்றாள்.

நீ எனக்கு ஓகே சொல்லணும்னு நான் உன்ன தூக்கிக்கல நிஷா. மத்த நேரங்கள்ல அம்மா இருக்காங்க. இப்படி உன்ன தூக்கிக்கிட முடியறதில்ல.

நிஷா பதில் பேசாமல் அவன் கையில் கிடந்தாள். அவளுக்கு சுகமாக இருந்தது. அவனது காதலை... அவளால் தட்டிக்கழிக்க முடியும் என்று தோன்றவில்லை.

நான் என்ன பதில் சொன்னாலும் நீங்க அத ஏத்துக்கணும். சரியா கதிர்? என்றாள்.

உங்க வீட்டுல உள்ளவங்களை நெனச்சு குழப்பிக்காம... நீ எந்த முடிவெடுத்தாலும் அதை நான் ஏத்துக்கிடுறேன் நிஷா. சரியா? ஐ மீன்... என்ன பிடிச்சிருக்குன்னா.. பிடிச்சிருக்குன்னு சொல்லிடனும்

ம்...

அவளது தலை, வாசலில் இடித்துவிடாமல் அவளை கவனமாக உள்ளே கொண்டுபோய்.. பெட்டில் கிடத்தினான். உன்னால இந்த வீடே அழகாயிடுச்சு நிஷா. குட் நைட்.. என்று சொல்லிவிட்டு படியிறங்கினான்.

நிஷா கதிர் சொன்னதையே நினைத்துக்கொண்டு தூங்கமுடியாமல் கிடந்தாள்.

எனக்குத் தேவை உன்னோட சம்மதமும், பழசையெல்லாம் முழுசா மறந்துட்டு உங்ககூட சந்தோஷமா வாழ்வேன் கதிர்.. என்கிற உன் உறுதியான முடிவும்தான் நிஷா...!